முடி வறண்டு போயிருக்குனு கவலையா? ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க? எவ்வாறு பயன்படுத்தலாம்??

முடி வறண்டு போயிருக்குனு கவலையா? ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க? எவ்வாறு பயன்படுத்தலாம்??

முடி வறண்டு போயிருக்குனு கவலையா? ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க? எவ்வாறு பயன்படுத்தலாம்??

உங்களுக்கு முடி வறண்டு இருக்கும் பிரச்சனை உள்ளதா? அப்போ முடியின் சத்துக்கள் குறைந்து உள்ளது. முடி வறட்சியில் தொடங்கி உதிர்தல் வரை சென்று விடும். இதற்கு நமது முடிக்கு தேவையான சத்துக்களை நாம் கொடுக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

முடி என்பது ஆரோக்கியமுடனும் நீர்ச்சத்து நிறைந்தும், ஈரப்பதத்துடனும் காணப்படவேண்டும். இவ்வாறு இருந்தாலே தலை ஆரோக்கியம் உள்ளது என்று எண்ணலாம்.

தலை முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் குறைந்து வறண்டு பொய் காட்சியளிக்கும் இதற்கு உங்கள தலையை ஊதசத்து மற்றும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள எண்ணெய் உதவுகிறது.

வறண்ட தலை முடி

வறண்ட தலைமுடியை ஆலிவ் ஆயிலை கொண்டு மீண்டும் பொலிவை ஏற்படுத்த முடியும். ஆன்டி ஆக்சிடென்ட்களின் சத்துக்கள் நிறைந்து விளங்கும் ஆலிவ் ஆயில் வைத்து ஆரோக்கியமான தலைமுடியை கொண்டு வர முடியும். இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்து இருக்கின்றன. இது உங்கள் முடியில் உள்ள சேதங்களை சரி செய்து முடிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவல்லது.

சிகிச்சை

உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளான அழற்சி, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஆலிவ் எண்ணெயில் உள்ள கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை உதவுகிறது. மேலும் வறண்ட தலைக்கு ஆலிவ் ஆயிலை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி காண்போம்.

ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்தல்

தலை வறண்டு போகாமல் தடுக்க சிறந்த வழி ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்தலே ஆகும்.

தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய்

செய்முறை: ஆலிவ் எண்ணையை ஒரு கடாயில் வைத்து சிறிதளவு சூடாக்கிக் கொள்ளவும். சூடு ஆறியதும் அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். பிறகு ஒரு துணி அல்லது ஷவர் கேப் கொண்டு 15 -30 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு சல்பேட் இல்லாத மைல்டு ஷாம்பூவை வைத்து தலையை நன்கு அலச வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்துவதால் உச்சந்தலை தூய்மையாகவும் ஆரோக்கியமுடனும் மற்றும் சருமத்தில் அணுக்கள் வெளியேறாமல் பாத்துக்கொள்கிறது.

தேவையான பொருள்கள்

3 -5 ஸ்பூன் சர்க்கரை
1 /4 கப் ஆலிவ் ஆயில்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் ,மற்றும் சர்க்கரை வைத்து ஸ்க்ரப் செய்துகொள்ளவும். செய்த கலவையை கொண்டு தலை முழுவதும் சூழல் வடிவில் மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு 15 நிமிடம் அப்டியே நன்கு ஊற வைக்கவேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.

ஆலிவ் எண்ணெய், தேன் மற்றும் அவகாடா

செய்முறை: ஆலிவ் எண்ணெய் சிறிதளவு நன்கு பழுத்த அவகாடோ மற்றும் தேன் சேர்த்து தலையில் மசாஜ் செய்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து ஒரு துணியை கொண்டு தலையை 20 நிமிடம் மூடிக்கொள்ளவும். 3 அல்லது 4 நிமிடம் தலையை நன்கு மசாஜ் செய்து கொள்ளவும். அதன்பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்

1/2 கப் ஆலிவ் ஆயில்

1 /2 கப் ஆப்பிள் சிடர் வினிகர்

செய்முறை: ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணையை சூடாக்கி அது ஆறியதும் தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு 20-25 நிமிடம் ஊறியதும் அதை நன்கு ஷாம்பு கொண்டு அலசவும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகபடும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *