இந்தியாவில் தேனிலவு செல்வதற்கான சிறந்த 10 இடங்கள் என்னென்ன..?

இந்தியாவில் தேனிலவு செல்வதற்கான சிறந்த 10 இடங்கள் என்னென்ன..?

திருமணம் என்பது நம் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைகிறது. அது சிலருக்கு சந்தோசமான திருப்புமுனை சிலருக்கு சோகமான திருப்புமுனையாக இருக்கலாம். ஆனால் அது நாம் வாழும் வாழ்வினை பொறுத்து தான் சந்தோஷம் அமைகிறது. சரி நாம் தேனிலவு பற்றி பார்ப்போம். திருமணமான அனைவர்க்கும் தேனிலவு செல்லவேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். தேனிலவு செல்ல சரியான இடமாக இருந்தால் அது அவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத தருணுமாக தான் இருக்கும். அதுவே அவர்களின் வாழ்க்கையின் சந்தோசத்திற்கான ஆரம்பம் ஆகும். தேனிலவு செல்வதற்கான சிறந்த 10 இடங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1. இலட்சத்தீவுகள்

இலட்சத்தீவுகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அங்கு சென்று பார்த்திருக்க மாட்டோம். திருமணம் ஆன பிறகு உங்கள் துணையுடன் தேனிலவு செல்வதற்கான சிறந்த இடம் இலட்சத்தீவு ஆகும். இலட்சத்தீவுகள் இது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைநகரம் கவரத்தி. திருமணமானவர்கள் செல்ல அணைத்து வசதிகளும் மற்றும் தாங்கும் விடுதிகளும் இங்க ஏராளம் உள்ளன. துணையுடன் தேனிலவு நேரத்தை சந்தோசமாக வைக்க இதை சிறந்த இடமாக இருக்கிறது. இதன் சதுரபரப்பளவு 30 சதுர கி மீ கொண்டது 36 தீவுகளாக இது அமைந்துள்ளது.

2. கோவா

கோவா இந்த இடத்தை பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது என்பதே உண்மை. இது சுற்றுலா செல்ல ஒரு சிறந்த இடம் என்பது அனைவரும் அறிந்ததே. இது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். தேனிலவு செல்ல ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இது இருக்கிறது. இது கடற்கரைகளை மையமாக அமைந்திருக்கும் இடமாகும். இங்கு தேனிலவு சென்றால் நிச்சயம் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

3. கூர்க்

கூர்க் இது முதலில் தனி ஒரு மாநிலமாக இருந்தது. அதன் பிறகு இதனை கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது கூர்க் கர்நாடக மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இருக்கிறது. கூர்க் தேனிலவு தம்பதிகளுக்கு சொர்க்கமாக அமைகிறது என்றும் சொல்லலாம். இது இயற்கையின் மொத்த அழகையும் கொண்ட ஒரு சிறந்த சுற்றுலா இடமாகும். தேனிலவு சென்றால் இயற்கை அழகுடன் சேர்த்து தேனிலவும் சந்தோசமானதாக அமையும். காடுகளின் அழகையும் காவேரி ஆற்றின் அழகையும் கண்டுகளிக்க சிறந்த இடமாக இருக்கிறது.

4. கபினி

கபினி இதுவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வனம் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இதில் காடுகள் ஆறுகள் என அனைத்தும் இருக்கும்.கபினி ஆறு இது 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். கபினி என்பது ஆற்றங் கரையை ஆற்றிய வனப்பகுதி ஆகும். இங்கு தேனிலவு சென்றால் அதன் அழகையும் அமைதியும் பார்த்துக்கொண்டே துணையுடன் தேனிலவு அழகானதாக அமையும். தம் துணையுடன் கபினி ஆற்றில் பரிசல் பயணம் செய்வதே ஆனந்த அனுபவமாக இருக்கும்.

5. டல் ஹௌஸி

டல் ஹௌஸி இது மலைசார்ந்த இடமாகும். இது வட இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் நிறைந்த அழகிய இடமாகும். இங்கு தேனிலவு செல்பவர்கள் அவர்களுது தேனிலவை ஆனந்தமாக இருந்த வருகிறார்கள். அதன் அழகிய மலைகளும் காடுகளும் அதன் அழகை அதிகரிக்கும் வண்ணம் இருக்கின்றன. இங்கு ஆப்பிள் தோட்டங்களும், கண்களுக்கு ஆச்சரியமூட்டும் மலைத்தொடர்களும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆனவர்களுக்கு தேனிலவு செல்ல ஏற்ற இடமாக இருக்கிறது.

6. கேரளா

கேரளா இது இயற்கை கடவுளின் தேசம் என்றழைக்கப்படுகிறது. கேரளா மாநிலத்தில் சுற்றுலா செல்ல நிறைய இடங்கள் இருக்கின்றன. அதில் கோவளம், வர்களா,பெக்காள், ஆலப்புழா போன்ற எண்ணற்ற இடங்கள் இருக்கின்றன. இத்தனை அழகிய இடங்கள் இருக்கும் இடத்திற்கு உங்கள் துணையுடன் சென்றால் அது நிச்சயம் மறக்க முடியாத தேனிலவாக அமையும். இயற்கையின் அழகில் தேனிலவு செல்வது என்பது அனைவர்க்கும் நிச்சயம் பிடிக்கும். கடற்கரையோரம் அமர்ந்து துணையுடன் கடலை ரசிக்கலாம். தமிழ்நாட்டிற்கு மிக அருகில் இருப்பதால் கேரளா செல்வது என்பது எளிதானதே. திருமணம் ஆன பிறகு தேனிலவு கேரளா சென்றால் தேனிலவு நிச்சயம் மகிழச்சியானதாக இருக்கும்.

7. வயநாடு

வயநாடு இது கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. காடுகளும் இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும் வனப்பிரதேசம் ஆகும். தேனிலவு செல்ல ஏற்ற இடமாக இருக்கும். இங்கு உள்ள தேயிலை வாசனை ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். மலைகளில் தம் துணையுடன் கை கோர்த்து சென்று வருவது ஒரு அழகிய தருணமாக இருக்கும். காடுகளில் சென்று வனவிலங்குகளை பார்வையிடக்கூடிய வசதியும் இருக்கிறது. இங்கு கோழிக்கோடு விமானநிலையம் அருகிலேயே அமைந்துள்ளது.

8. அந்தமான் நிக்கோபார் தீவு

அந்தமான் நிக்கோபார் தீவு இது வங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள தீவு ஆகும். தேனிலவு செல்ல மிகசிறந்த இடமாக இருக்கிறது. அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வீடுகளில் தங்கி தேனிலவை கடலின் அழகை ரசிக்கலாம். கப்பல் வீடு போன்ற அணைத்து வகையான சந்தோஷங்களும் இருக்க கூடியது அந்தமான் நிக்கோபார் தீவு. திருமணமான பின் தேனிலவு இங்கு சென்றால் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

9. தேக்கடி

தேக்கடி இது தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இடமாகும். திருமணமானவர்கள் அதிகம் இந்த இடத்திற்கு தான் தேனிலவு செல்கின்றனர். இங்கு காடு மற்றும் ஆறுகள் அனைத்தும் நிறைந்துள்ள இயற்கை பிரதேசம் ஆகும். இங்கு குறைந்த விலையில் தாங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. யானை சவாரி, படகு சவாரி, போன்றவைகள் தேனிலவை மேலும் சிறப்பாக்குகிறது. இந்தியாவிலேயே மிக பெரிய வன சரணாலயம் இங்கு தான் அமைந்துள்ளது. இங்கு தேனிலவு செல்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

10. ருஷிக்கொண்டா

ருஷிக்கொண்டா ஆந்திர மாநிலத்தில் இருக்க கடற்கரை சார்ந்த இடமாகும். புதுமணத்தம்பதிகள் இங்கு சென்று துணையோடு கடல் மற்றும் அதன் இயற்கை கண்டு ரசிக்கலாம். பசுமை நிறைந்த காட்சிகள் இங்க ஏராளமாக அமைந்துள்ளன. விசாகப்பட்டினம் விமானநிலையம் அருகிலேயே உள்ளது. தேனிலவு செல்வதற்கான சிறந்த இடமாக இருக்கிறது ருஷிக்கொண்டா. கடற்கரையோரம் இருக்கும் வீடுகளில் இருந்து கடல் அழகை ரசிக்குமாறு அமைந்துள்ளதால் தேனிலவு அழகானதாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *