அல்சர் வந்தால் இதை மட்டும் சாப்பிடுங்க சரியாகிவிடும்..

அல்சர் வந்தால் இதை மட்டும் சாப்பிடுங்க சரியாகிவிடும்..

அல்சர் என்பது வயிற்றில் ஏற்படும் புண் ஆகும். அமிலம் உற்பத்தியாகும் பகுதிகளில் புண்கள் ஏற்படுவதே அல்சர் எனப்படும். எச். பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியாலேயே வயிற்று புண் உண்டாகிறது. நாம் சாப்பிடும் உணவுகளாலும் சாப்பிடாம இருப்பதாலேயும் மற்றும் அதிக மாத்திரைகள் உண்பதாலேயும் இவ்வாறு ஏற்படுகின்றன.

வயிற்றில் உண்டாகும் புண்களை சரிசெய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் நிறைய இருக்கின்றன. அவைகள் வயிறு சம்மபதப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்துவிடும். அவற்றைப்பற்றி இந்த பதிவில் காண்போம்.

அல்சர் அறிகுறிகள்

அல்சர் வந்தால் அடிவயிறு வலி, வயிற்று எரிச்சல் போன்றவை அறிகுறியாகும். வயிறு கனமாக இருப்பதும் கூட ஒரு அறிகுறியாகும். அல்சர் என்பது சரியாசெய்யமுடியாத நோய் அல்ல. அவை உணவின் மூலமே சரிசெய்யமுடியும். வாந்தி ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும் போது மருத்துவரை அணுகவேண்டும். அவர்கூறும் ஆலோசனைபடி மருந்துகளை மேற்கொள்ளவேண்டும்.

pH பற்றி தெரியுமா?

நமது pH அளவை சீராக வைப்பதின் மூலமே வயிறு புண்களை குறைக்கமுடியும். இவற்றின் அளவை சீராக வைத்து வயிற்று புண்களை சரிசெய்ய சில உணவுகள் இருக்கின்றன. நீங்கள் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்திலேயே இந்த பதிவில் உள்ள உணவுகளை உண்பதால் சரிசெய்துவிடலாம்.

அல்சரை சரிசெய்ய உதவும் உணவுகள்

நாம் உண்ணும் உணவுகள் சில அல்சரை சரி செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஆனால் சில உணவு வகைகள் அதற்கு எதிர்மாறாக பாதிப்பை உண்டாக்கக்கூடியது. மறுத்தவர் கூறிய மருந்துகளுடன் இவற்றை உண்டுவரலாம். அவரிடம் ஆலோசனை பெற்று உண்பதே உங்கள் உடலுக்கும் சிறந்ததே.

கேரட்

வயிற்றில் உண்டாகும் பிரச்சனைகள் சரிசெய்வதில் கேரட் முக்கியபங்குவகிக்கிறது. அமிலத்தால் ஏற்படக்கூடிய புண்கள் மற்றும் பாதிப்புகளை சரிசெய்யும் திறன் கேரட்டிற்கு உண்டு. அமிலத்தை சரிசெய்து வயிற்றுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். கேரட் ஜூஸ் மற்றும் சாலட் போன்றவையாக எடுத்துக்கொள்ளலாம். வயிற்று எரிச்சல், உண்ட உணவு எதுக்களித்தல் போன்றவை சரியாக்கி ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் ஒரு சிறந்த சத்துள்ள உணவுகள் ஆகும். அதில் அதிகளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நமது வயிற்றில் செரிமான மண்டலத்தை கட்டுப்படுத்தும் திறன் ஆப்பிளில் உள்ள ஆர்கானிக் அமிலத்திடம் உண்டு. வயிற்று புண்களை சரிசெய்ய ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது. அல்சர் மட்டுமில்லாது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் இரைப்பை அழற்சி போன்றவைகளுக்கும் ஆப்பிள் உண்டுவரலாம்.

கற்றாழை

கற்றாழை ஒரு சிறந்து மருத்துவகுணம் கொண்ட தாவரமாகும். வயிற்றில் புண் ஏற்பட்டவர்கள் கற்றாழை உண்டுவந்தால் வயிற்றில் அதிகரித்த அமில சாறு உண்பதியை கட்டுப்படுத்த முடியும். அல்சர் உண்டாக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியை சரிசெய்யும் திறன் கொண்டது கற்றாழை. வயிற்றில் சேதமடைந்த திசுக்களை குணமாகும் குணம் கொண்டது கற்றாழை.

வாழைப்பழம்

வாழைப்பழம் அனைத்துவிதமான உடல் பிரச்சனைகளுக்கும் உண்ணக்கூடிய பழமாக உள்ளது. இதில் ஸ்டார்ச் மற்றும் அல்கலின் அதிகம் இருக்கின்றன அவை பி அளவை சீராக வைக்க உதவுகிறது. இரைப்பையில் உள்ள சளி கோளாறுகளை சரிசெய்கிறது. வயிற்றில் உண்டான புண்களை சரிசெய்து இதமான உணர்ச்சியை வயிற்றுக்கு அளிக்கிறது. புண்களை சரி செய்து சேதமடைந்த திசுக்களுக்கு ஊட்டம் அளிக்கிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒரு சிறந்த அமில எதிர்ப்பு காய்கறியாகும். வயிற்றில் ஏற்படும் புண் போன்றவைகளை உடனே சரிசெய்யும் ஆற்றல் பெற்றது உருளைக்கிளங்கு. இதில் இருக்கும் நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இவற்றில் உள்ள சத்துக்களாகும். வயிற்றின் சீரான செரிமானத்திற்கு இவைகள் உதவுகின்றன. இதில் உள்ள உப்பு சத்து அழற்சியை சரி செய்து சேதமடைந்த திசுக்களை சரிசெய்கின்றன.

இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது

வயிற்றில் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதில் இருக்கும் சில அமிலங்கள் வயிற்று புண்களை அதிகரிக்கின்றன. மருத்தவ சிகிச்சை மேற்கொள்ளும் போது இதை தவிர்த்தல் தான் விரைவில் குணம் அடைய இயலும்.

காபி மற்றும் காபின் கொண்ட மற்ற பானங்கள்

சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புவகைகள்

கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள்

காரம் அதிகம் உள்ள உணவுகள்

மதுபானங்கள்

பிரட் மற்றும் சந்தையில் கிடைக்கும் கேக் போன்ற வகைகள்

பொரித்த உணவு மற்றும் விரைவு உணவுகள்

இந்த உணவுகளை தவிர்ப்பதால் மிக விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *