ஆண்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும் எளிய இயற்கை வைத்தியம்?

ஆண்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும் எளிய இயற்கை வைத்தியம்?

வயது என்பது வருடம் வருடம் அதிகரித்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இளம் வயதில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்து இளமையாக இருக்க முடியும். தற்போது பலருக்கு உண்ணும் உணவால் மற்றும் பழக்கவழக்கங்களால் வயதான தோற்றம் ஏற்படுகின்றன அதை சில வழிகள் மூலம் சரிசெய்து கொள்ளலாம். அதில் சிலவற்றை இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆண்கள் பெரும்பாலும் தனது அழகை தொடக்கத்தில் கண்டுகொள்வதில்லை. ஆனால் பின்பு அதனை நினைத்து வருத்தம் கொள்கின்றனர். அதனால் பல கெமிக்கல் நிறைந்த பொருள்களை உபயோகிக்கின்றனர் ஆனால் அது தற்போது மட்டுமே அழகாக தெரியத்தான் நிரந்தரமானது அல்ல. இயறக்கை முறையில் சிலவற்றை காண்போம் அது நிரந்தரமானது அதை பற்றி அறிந்து கொள்வோம்.

இளம் வயதிலே சுருக்கமா?

சுருக்கம் என்பது உடலில் பல இடங்களில் ஏற்படுகின்றன அது இயல்பு தான் என்றாலும் பலருக்கு வேதனையாகவே உள்ளது. இது ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைவு, சுற்றுசூழல் மற்றம் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன.

முட்டை வைத்தியமா?

ஆம் முட்டை வைத்து தான் வைத்தியமே! முட்டையில் உள்ள வெள்ளை பகுதியை கொண்டு வைத்தியம் செய்யலாம். அது நமது முக ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெள்ளை கரு 1

யோகர்ட் 1 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை 1 ஸ்பூன்

செய்முறை: முட்டையில் உள்ள வெள்ளை கருவை எடுத்து அதை சர்க்கரை மற்றும் யோகர்ட் உடன் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் வரை நன்கு உளற வைக்க வேண்டும். இவ்வாறு வாரம் 1 அல்லது 2 முறை செய்வதன் மூலம் சுருக்கம் நீங்குவதோடு இளமையும் பெறலாம்

கற்றாழை ஜெல்

முக சுருக்கத்தை உடனடியாக சரிசெய்ய எளிதான ஒரு வழி கற்றாழை ஜெல் உபயோகிப்பது ஆகும்.

கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன்

பழுத்த தக்காளி 1

வாழைப்பழம் பழுத்தது பாதி

செய்முறை: தக்காளியை எடுத்து கொண்டு அதை நன்கு அரிந்து அதன் விதையை நீக்கி கொள்ளவும். கற்றாழை ஜெல் மற்றும் வாழைப்பழத்துடன் அரிந்த தக்காளியையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அதை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்து பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தலே முக சுருக்கங்கள் மறைந்து போகும்.

சுருக்கம் போக?

முக சுருக்கம் போக இந்த முறையயிலும் சரிசெய்யலாம் அதற்கு தேவையான இந்த இரண்டு பொருட்கள் போதுமானது.

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

பேக்கிங் சோடா 1 ஸ்பூன்

பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு இந்த பேஸ்டை முகத்தில் தடவி ௧௦-௧௫ நிமிடம் வரை மசாஜ் செய்து கொள்ளவும். இந்த முறையில் வாரம் ஒரு முறை செய்தாலே முக சுருக்கம் நீங்கும்.

வாழைப்பழ முறை

வாழைப்பழத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று முக சுருக்கம் நீங்கவும் உபயோகப்படுத்தலாம்.

பழுத்த வாழைப்பழம் பாதி எடுத்துக்கொள்ளவும்

ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன்

தேன் ஒரு ஸ்பூன்

செய்முறை: வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து அதனுடன் தேன் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்தால் முக சுருக்கம் நீங்கி முகம் பொழிவு பெறும்.

இந்த பதிவு உங்களுக்கு பயன்பெறும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *