சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்
சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்
நம் அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்து கொள்வது தேங்காய். அதில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் உள்ளன. தேங்காய் நமது சருமத்திற்கும் முடிக்கும் அழகு தரவல்லது. இதனை சரியாக உபயோகிப்பதன் மூலம் நம் சருமம் பல மடங்கு ஆரோக்கியம் பெறுகின்றன. தேங்காய் பால் கொண்டு நமது சருமத்தை எவ்வாறு அழகாக வைப்பது என்று இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தேங்காய் பால் குடிப்பதற்கு மிக சுவையாக இருக்கும் என்பது அதை குடித்தவர்கள் தெரிந்து வைத்திருப்பர். அது சுவை மட்டுமல்ல அதில் பல மூல பொருட்களும், வைட்டமின்களும், தாதுக்களும் இதில் இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
வறண்ட சருமத்திற்கு தேங்காய் பால்
நமது முகத்தில் ஏற்படும் பெரிய பிரச்சனை முக வறட்சி தான். உங்களுக்கும் முகம் வறட்சியாக உள்ளதா? இதனால் பல கிரீம்களையும், சோப்புகளையும், உபயோகப்படுத்தி பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறதா? தேங்காய்ப்பாலை உபயோகப்படுத்தி பாருங்கள் இது இயற்கையானதும் உடலுக்கும் நல்லதும் ஆகும். தேவையற்ற வேதிப்பொருள்கள் கலந்த கிரீம்களை உபயோகிப்பதால் முகப்பொலிவு கெட்டுத்தான் போகின்றன. சரி நாம் தேங்காய் பால் கொண்டு எவ்வாறு ஆரோக்கியம் அடைவது என்று தெரிந்து கொள்வோம்.
இதற்கு தேவையான பொருள்கள்:
தேங்காய் பால் அரை கப்
ரோஸ் நீர் அரை கப்
ரோஜா இதழ் சிறிதளவு
செய்முறை: நாம் குளிக்கும் நீரை சுத்தப்படுத்தி சிறிதளவு சூடுபடுத்திக்கொள்ளவும். அந்த நீரில் தேங்காய் பால், ரோஸ் நீர், மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து குளிக்கும் நீரில் கலந்து கொள்ளவும். இதனை தொடர்ந்து குளிக்கும் நீரில் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சியும் சொர சொரப்பான சருமமும் நீங்கி சருமம் மென்மையுடனும் ஈரத்துடனும் இருக்கும்.
இளமையான தோற்றத்திற்கு
நமது உடல் தற்போது உள்ள உணவு பழக்கவழக்கத்தால் விரைவாகவே வயதான தோற்றம் அடைகிறது. வயதான தோற்றம் இல்லாமல் இளமையான தோற்றத்தோடு இருக்க வேண்டுமா. இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பாதாம் 6
தேங்காய் பால் சிறிதளவு
செய்முறை: பாதாமை எடுத்து இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளவும் அதனை மறுநாள் எடுத்து தோல் உரித்து அதன் பின் தேங்காய் பாளை சேர்த்து நன்கு அரைத்து அதனை முகத்தில் பூசி ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமையாக வைக்கும்.
முக பருக்கள் நீங்க வேண்டுமா?
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் சிறிதளவு
ஓட்ஸ் 3 ஸ்பூன்
செய்முறை: முகத்தில் உள்ள பருக்களை எளிய வகையில் நீக்குவதற்காக முதலில் ஓட்ஸை அரைத்து அத்துடன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து கொண்டு அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை வைத்து சூடான வெது வெதுப்பான நீரில் கழுவி வருவதால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் நீங்கும்.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.