பாதாம் அதிகம் உண்பதால் சிறுநீரக கோளாறு மற்றும் பல விளைவுகளை உடல் சந்திக்க நேரிடுமாம்?

பாதாம் அதிகம் உண்பதால் சிறுநீரக கோளாறு மற்றும் பல விளைவுகளை உடல் சந்திக்க நேரிடுமாம்?

பாதாம் என்பது உடலிற்கு சத்துக்களை கொடுக்கவல்லது ஆதலால் அதை தினமும் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. பாதாமை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள் என்பதே உண்மை. மேலும் பலவிதமான உணவுகளில் பாதாம் ருசிக்காக பயன்படுத்தப்படுகின்றன. பாதாம் நட்ஸ் வகையை சார்ந்த உணவுப்பொருளாகும். பாதாம் உடலிற்கு நல்லது தான் ஆனால் அதை அதிகம் உண்ணும் போது உடலில் பல விளைவுகள் ஏற்படுகிறதாம் அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

பாதாம் ஒரு அருமையான உணவு பொருளாகும். அதை நாம் உண்ணுவதால் நன்மை உண்டு என்று எண்ணித்தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் ஆனால் அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவை நாம் நினைத்துப்பார்த்தில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைத்து உணவுபொருளுக்குமே கூறியதுதான். இனி அதிகம் சாப்பிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.

பாதாம்

நாம் சாப்பிடும் உணவுப்பொருளில் பாதாம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒரு பொருள் ஆகும். அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருள்கள் உள்ளன. இவைகள் சரியான அளவில் உடலில் இருந்தால் நாம் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருப்போம். ஆனால் அதன் அளவு கொஞ்சம் அதிகம் ஆனாலும் நம் உடம்பில் நச்சு தன்மை அதிகரித்து உடலிற்கு ஆபத்தை விளைவிக்கும்.

வயிறு கோளாறு

பாதாம் அதிக அளவு உண்பதால் நன்மை என்பது தவறான கருத்து என்பதே உண்மை. நாம் அதிக அளவு பாதாமை எடுத்து கொள்வதால் உடலில் அது நேரடியாக செரிமான மண்டலத்தை பாதித்து வயிறுக்கு பல கோளாறுகளை உண்டுபண்ணுகிறது. வயிறு பெருத்தல், மலச்சிக்கல், செரிமானம் அடையாமல் இருப்பது போன்ற பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சிறுநீரக கோளாறுகள்

பாதாமில் அதிகமான ஆக்சலேட் இருக்கின்றன அவை கிட்னிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. கால்சியம் சத்துக்களால் கிட்னி எடுத்துக்கொள்வதை இந்த ஆக்சலேட்கள் தடுக்கின்றன. நாம் அதிக அளவில் பாதாம் உண்பதால் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். மேலும் அதிக அளவில் பாதாம் உண்பதால் கிட்னியில் கற்கள் வரும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

ரத்தம் உறைபடுவது?

உடல் அனைத்து சத்துக்களும் பெற வேண்டும் அதுவும் அளவானதாக இருக்கவேண்டும். உடலில் ஊட்டச்சத்து அதிக அளவில் இருந்தால் அவை பேராபத்தை ஏற்படுத்தக்கூடும். பாதாமில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் 25ல் இருந்து 365 மில்லி கிராம் அளவே இருக்கவேண்டும். அதற்கும் அதிகமாக இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் பாதிப்படைந்து ரத்தம் உறையும் நிலை ஏற்படலாம். இதனால் பக்கவாதம் ஏற்படுகின்றன.

கசப்பு தன்மை கொண்ட பாதமா?

பாதாம் கசப்பு தன்மை கொண்டதாக இருக்கிறதா? அப்போது அதை உண்பதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அவற்றில் விஷ தன்மை இருப்பதால் நமக்கு கசப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த கசப்பு தன்மை கொண்டு பாதாம் சாப்பிடுவதால் உடலில் வயிற்று வலி மற்றும் நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படக்கூடிய ஆபத்துகள் இருக்கின்றன.

உடல் எடை பாதிப்பு

பாதாம் உண்பதால் உடல் எடை வேகமாக அதிகரிக்குமாம். 1 அவுன்சு பாதாமில் 14 முதல் 163 கிராம் கலோரிகள் இருக்கின்றன. இந்த கலோரிகள் நம் உடலில் கொழுப்புகளை ஏற்படுத்துகின்றன. அதிக அளவில் கொழுப்புகள் சேர்ந்தாலே நம் உடலில் பல பிரச்சனைகள் வருகின்றன.

உயர் ரத்த அழுத்தமா?

பாதாமை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் உடலில் பல பிரச்சனை ஏற்படுகிறது அதில் ஒன்று ரத்த அழுத்தம். பாதாமில் மாக்னீஸ் என்பது அதிக அளவில் இருக்கின்றன இது நமது உடலுக்கு அதிக அளவில் செல்லும் போது உடலில் ரத்த அழுத்தமானது அதிகரிக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் நமது உடலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது .

அலர்ஜி ஏற்படும்

பாதாம் உண்பதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பாதாம் உண்பதால் அலர்ஜி ஏற்படுகிறது என்பது உண்மை தான். சிலருக்கு அதனால் இவ்வாறு அலர்ஜி ஏற்படக்கூடும். மேலும் மூச்சு திணறல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற வயிறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பாக்டீரியா தொற்றும் வாய்ப்பு?

பாதாமில் பாக்டீரியா தொற்றும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறதாம். பாதாம் வளரும் போதே அதில் பாக்டீரியாக்கள் இருக்க கூடுமாம். எனவே அதை உண்ணும் முன் கழுவி சுத்தம் செய்து அதன் பின்னரே சாப்பிடவேண்டும். தோல் நீக்கி உண்பது நல்லது.

எவ்வளவு தான் சாப்பிட்டால் நல்லது?

பாதாமை அளவாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பலருக்கு உள்ள சந்தேகமாக இருக்கின்றன. அதை பற்றி மருத்துவர்கள் கூறுவது ஒரு நாளைக்கு 40 கிராம் அளவு பாதாமை எடுத்து கொள்வதே நல்லது என்கின்றனர். இவ்வாறு சாப்பிட்டால் உடல் கோளாறுகள் ஏற்படாது. இந்த அளவில் மாற்றம் ஏற்பட்டு அதிகம் உண்டால் அது உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும்

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இது உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *