அபான முத்திரை பற்றி அறிவீர்களா? அதை தொடர்ந்து செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

அபான முத்திரை பற்றி அறிவீர்களா? அதை தொடர்ந்து செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் உடல் ஒரு புரியாத புதிர் என்றே கூறலாம். அதனை சரியாக பராமரிப்பது என்பது சாதாரன விஷயம் கிடையாது. நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் வயிற்றில் இருந்தே தொடங்குகிறது அதற்கு கரணம் வயிற்றில் இருக்கும் நச்சுக்கிருமிகள் மற்றும் வாயு பிரச்னைகளுமே ஆகும். வயிற்றில் தேவையற்ற கழிவுகள் இருப்பதே இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதற்கான யோகா பயிற்சி தான் அபான முத்திரையாகும். இதை செய்தாலே வயிற்றில் உள்ள கழிவுகள் மற்றும் வாயு தொல்லைகள் இருக்காது.

அபான முத்திரை செய்வது எப்படி?

கட்டை விரல் நுனியில் நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். மற்ற விரல்களை நீட்டி இருக்குமாறு வைக்கவேண்டும். இந்த முறையில் தினமும் செய்து வரவேண்டும். இந்த முத்திரையில் நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் என்ற மூன்று ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

அபான முத்திரையின் நன்மைகள்

இது வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது இதனால் மலசிக்கல் பிரச்சனை தீர்ந்து வயிறு சுத்தமாகும். இவ்வாறு தொடர்ந்து அபான முத்திரை செய்வதால் பசியின்மை நீங்கும் மற்றும் வாயுத்தொல்லை நீங்கும். மேலும் இம்முத்திரையால் வயிறு மட்டுமல்லாமல் சிறுகுடல், பெருங்குடல், கணையம், மண்ணீரல், சிறுநீரகம்,மூக்கடைப்பு, தலைவலி, மூச்சு வாங்குதல் போன்ற பலவிதமான உடல் பிரச்சனைகள் நீங்குகின்றன.

நம் உடலை நம்மால் மட்டுமே சரியாக பார்த்து கொள்ள முடியும். மருத்துவம் பல வந்தாலும் இந்த முறை யோகா பயிற்சிகளை நாம் மறக்க கூடாது இதை பற்றி அறிந்து இதன் நன்மைகளை நாம் பெறவேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.