குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..!

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..!

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு சத்தாக இருக்க வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி சரியாக உணவு எடுத்துக்கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு ஊட்ட சத்து என்பதே குறைவாக தான் கிடைக்கிறது. இதுவே சுவையுள்ள உணவுகளை விரும்பி உண்ணுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சுவையாகவும் சத்தாகவும் இருக்கும் உணவுகளை கொடுக்க நினைக்கிறார்கள். இந்த கேரட் – முந்திரி அடை சுவையானது மட்டும் அல்ல ஊட்டச்சத்து அளிக்கக்கூடியதும் ஆகும். கேரட் – முந்திரி அடை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

கேரட் – முந்திரி அடை செய்ய தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – அரை கப்
துவரம் பருப்பு – 1 கப்
வர மிளகாய் – 3
அரிசி – 2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன் அளவு
கொத்தமல்லி – சிறிது
கேரட் துருவல் – கால் கப்
முந்திரி – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

கேரட் – முந்திரி அடை செய்முறை:

முந்திரி மற்றும் கொத்தமல்லியை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவேண்டும்.

ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை மிக்ஸியில் போட்டு அத்துனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்புடன் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்துவைத்த மாவில் உப்பு, கேரட் மற்றும் கொத்தமல்லி போட்டு அதனை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி (அடை போல தடிமனாக இருக்குமாறு ஊற்ற வேண்டும்) அதன்மேல் முந்திரியை கையால் தூவி அதன் மேல நெய் ஊற்றி வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.

இதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி செய்தாலே சுவையாக இருக்கும்.

ஊட்டச்சத்துள்ள கேரட் – முந்திரி அடை தயார்..

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.