நீளமான மற்றும் கருமையான கூந்தல் வேண்டுமா? அப்போ குப்பைமேனி இலையை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள்.

நீளமான மற்றும் கருமையான கூந்தல் வேண்டுமா? அப்போ குப்பைமேனி இலையை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள்.

கூந்தல் பிரச்சனை என்பது அனைவருக்குமே ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. இதற்கு குப்பைமேனி இலையும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இந்த இலையை பற்றி நீங்கள் அறிந்திருக்கீர்களா? அதன் குணத்தையும் நன்மையை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

குப்பைமேனி இலை

குப்பைமேனி இலைகளை கொண்டு நம் கூந்தலை பாதுகாக்க முடியும். அது பொடுகை எதிர்த்தும் மற்றும் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துகிறது. இது கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல தீர்வை தரவல்லது. இந்த செடி எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் வளரக்கூடிய தன்மை உள்ளது.

தலைமுடி உதிர்தல்

நம்மை சுற்றி உள்ள சுற்றுபுறக்காரணிகளால் நம் கூந்தல் பாதிப்பு அடைகிறது. இதனால் பொலிவிழந்து நம் கூந்தல் உதிரும் நிலை ஏற்படுகிறது.இதனால் தலையில் பொடுகு, முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. நம்மில் பலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கின்றன அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். இதற்கு ஒரு முக்கிய தீர்வாக குப்பைமேனி இலை இருக்கும்.

குப்பைமேனி

குப்பைமேனி இந்த செடி பல்வேறு இடங்களில் காணப்படும் ஒரு தாவரமாகும். இவை வளரும் இடம் பொதுவாக ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களாக தான் இருக்கும். ஆறு, குட்டை மற்றும் ஏரி போன்ற நீர் நிறைந்து இருக்கும் இடங்களிலே குப்பைமேனி செடியை அதிகம் காணமுடியும். மேலும் இது வயல் சார்ந்த இடங்களிலும் வளருகிறது.

இதன் மருத்துவ நன்மைகள்

குப்பைமேனி செடி பல நன்மைகளை தனுக்குள் கொண்டுள்ள ஒரு சிறந்த கிருமி எதிர்ப்பு செடியாகும். அது ஒவ்வாமை, அழற்சி போன்றவைகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இந்த இலைகளை டீ, டானிக் போன்றவைகளில் பயன்படுத்துகின்றனர்.
இது நாடு மருந்து மற்றும் மூலிகை கடைகளில் வாங்கலாம். இதனை நேரடியாக சாலட் மற்றும் பொறியலாக செய்து உண்ணலாம்.

கூந்தலிற்கு அளிக்கும் நன்மைகள்

குப்பைமேனி கூந்தலிற்கு சிறந்த ஒரு மருந்தாகும். அதனை சரியாக உபயோகித்து நாம் நன்மைகளை பெறவேண்டும். இது கூந்தலில் உள்ள எண்ணெயின் அளவை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை நீக்குகிறது. இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் வலுவடைந்து ஆரோக்கியமாக முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.இந்த செடியின் நன்மைகளை நன்கு அறிந்தவர்கள் அவர்கள் உபயோகிக்கும் ஷாம்பு மற்றும் எண்ணெய்களில் அதனை சேர்த்து உபயோகிக்கின்றனர்.

முடி உதிர்வு

குப்பைமேனியை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது வேர்கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்கிறது. இதனால் கூந்தல் வலிமையடைந்து உதிர்வதும் உடைவதும் தடுக்கிறது. நம் தலையில் ரத்த ஓட்டம் அதிகம் இருந்தாலே நம் முடியின் வேர்கள் நல்ல வலுவுடன் இருக்கும். இந்த குப்பைமேனி செடி நம் தலைக்கு நல்ல ரத்த ஊத்தி கொடுக்க வல்லது. தலையில் உள்ள கிருமிகளை அழித்து தலையில் எண்ணெயின் பதத்தை அதிகரித்து முடிக்கு ஊட்டம் அளிக்கின்றது.

கூந்தலை வலிமையாக வைக்கின்றது

இது கூந்தலின் வலிமையை அதிகரித்து அதன் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. குப்பைமேனியை தொடர்ந்து பயப்படுத்துவதன் மூலம் நம் முடியின் வேர்கள் நல்ல முறையில் வலுப்பெற்று நன்கு வளர்ச்சி பெறுகின்றன. குப்பைமேனி இலைகள் கூந்தலை சுத்தம் செய்து ஈரப்பதமாக வைத்திருப்பதால் கூந்தலின் தரம் மேம்படுகிறது. வலிமையாகவும் அடர்த்தியாகவும் மாறுகின்றன.

குப்பைமேனி டீ

கூந்தலில் பல நன்மைகளை பெற குப்பைமேனி இலையை கொண்டு தேனீர் செய்து தினமும் குடித்துவரலாம். 200 மில்லி லிட்டர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் குப்பைமேனி இலைகளை அதனுள் போட்டு 5 நிமிடம் அடுப்பில் குறைவான தீயில் கொதிக்கவிடவேண்டும். குப்பைமேனி இலையுடன் கொதித்த நீர் ஆறியதும் அதனை பருகலாம். மேலும் தலையில் ஷாம்பு பயன்படுத்திய பிறகு அந்த குப்பைமேனி இலையுடன் உள்ள நீரை கொண்டே அலசலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *