ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..?

ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..?

காய்கறி வகைகளில் ப்ரோக்கோலி மிகவும் சத்துள்ளது என்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. அனால் அதை எவ்வாறு சமைத்த சாப்பிடிக்குவது என்பது நிறைய பேருக்கு இருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இந்த பதிவில் சுவையான மற்றும் சத்து நிறைந்த ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 /2 ஸ்பூன்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
மிளகு தூள் – 1 ஸ்பூன்

ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்முறை:

ப்ரோக்கோலியை முதலில் நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.

அதன் பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இருக்குமாறு வெட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரம் எடுத்து அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அத்துனுடன் ப்ரோக்கோலி சேர்த்து 5 நிமிடம் வரை வேக வைத்து இறக்கி வைத்து நீரை வடிகட்டி அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,சேர்த்து வதக்கி அதன் வெங்காயமும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் அனைத்தும் பொன்னிறமாக வதக்கிய பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலரி அதில் வேகவைத்த ப்ரோக்கோலியை போடு பொன்னிறமாக்கி அத்துடன் மிளகு தூளை சேர்த்து கிளறி இறக்கி கொள்ள வேண்டும்.

சுவையான மற்றும் சத்தான ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை தயார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *