உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக்கொண்டே போகிறதா? தேன் இஞ்சி மற்றும் பூண்டு இதை சாப்பிட்டு பாருங்க?
உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக்கொண்டே போகிறதா? தேன் இஞ்சி மற்றும் பூண்டு இதை சாப்பிட்டு பாருங்க?
உடலில் கொழுப்பு வேண்டாம் என்று நினைத்தாலும் அதிகமான கொழுப்பு சேர்ந்து கொண்டே தான் போகிறது. இதனால் இதய நோய் போன்றவை எளிதாக ஏற்படுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது கடினமான ஒன்றுதான் எனினும் அதை கட்டுப்பாட்டில் வைப்பதே நல்லது. கொழுப்பின் அளவை எளிதாக குறைப்பதற்கு எளிய வகையான தேன் இஞ்சி பூண்டு போன்றவை பயன்படுத்தி குறைக்க முடியும்.
அதிகளவு கொழுப்பு
உடலில் கொழுப்பு இருந்தால் பல பிரச்சனைகளை நமது உடல் சந்திக்க நேரிடும். இதனால் உடலில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவை ஏற்படும் என்பதால் அதை சீராக வைக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த சில உணவு அட்டவனையை பின்பற்ற வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த சில மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எனினும் உணவுகளிலும் சில கட்டுப்பாடுகள் வேண்டும். உடலில் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு இயற்கையாக தீர்வு காண்பதே சிறந்த தீர்வு ஆகும். பக்கவிளைவுகள் இன்றி பணச்செலவும் இல்லாமல் உடலின் கொழுப்பை குறைக்க இயற்கை வைத்தியம் மேற்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
எவ்வாறு அறிந்துகொள்வது?
உடலில் அதிகளவு கொழுப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதை எவ்வாறு அறிந்துகொள்வது? நம் உடலில் கொழுப்பை கல்லீரல் உற்பத்தி செய்கின்றன. இது கொழுப்பு போன்று இருக்கும் உடலின் எல்லா அணுக்களிலும் இது இருக்கும். உடலில் கொழுப்பு அதிகளவு இருக்ககூடாது ஆனால் அது அளவாக இருந்தால் தான் உடல் சீராக வேலை செய்யும். அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும். கொழுப்பு இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
மருத்துவ முறைகள்
கொழுப்பு என்பது உடலிற்கு குறைவான அளவே தேவைப்படுகின்றன ஆனால் அது அதிகளவு சேராமல் பாத்துக்கொள்ளவேண்டும். கொழுப்பால் இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஆண்டு முழுவதும் பலர் இறக்கின்றனர். போதிய மருத்துவ சிகிச்சை இல்லாததால் இந்த நிலைமை ஏற்படுகிறது. கொழுப்பு அளவை குறைக்க பல மருந்துகள் மற்றும் இயற்கை மருந்துகள் இருந்தாலும் அதனை முயற்சிப்பது இல்லை. கொழுப்பின் அளவை குறைக்காமல் இருப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை சிலர் அறிந்துகொள்வது இல்லை.
அறிகுறிகள்
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானதாக இருப்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? அதன் அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம்.
தலைவலி
கண்பார்வை மங்குவது
நெஞ்சுவலி
மூட்டுகளில் அழற்சி
வயிறு வீக்கம் அல்லது அஜீரணம்
மயக்கம்
மலசிக்கல்
பலவீனம் மற்றும் சோர்வு
இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்குமாயின் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. பரிசோதனை செய்த பின் உங்களுக்கு உயர் கொழுப்பு பாதிப்பு உள்ளதா என்பதை பற்றி கூறுவார்கள்.
இஞ்சி, பூண்டு, தேன்
இஞ்சி, பூண்டு, மற்றும் தேன் அனைத்தும் சேர்த்து பானம் தயாரித்து உண்டுவந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும். உங்கள் உடலில் ரத்த கொழுப்பு அளவை விரைவாக கட்டுப்படுத்த இந்த பானம் ஒரு சிறந்த பொருளாகும். இதை நம் வீடுகளில் எளிதில் தயாரிக்க முடியும். இது உதய தமனிகளை சுத்தம் செய்கின்றன மற்றும் இதய பாதிப்பை தடுக்கவும் செய்கிறது.
இதில் உள்ள பொருள்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை கொண்டவை. இதனால் அஜீரணம், உயர் ரத்த அழுத்தம் என்னும் ஹைப்பர் டென்ஷன், எலும்புப்புரை, ஆஸ்துமா போன்றவை கட்டுப்படுத்த இந்த பானம் ஒரு சிறந்த அருமருந்தாக இருக்கிறது.
சீராகிறது ரத்த ஓட்டம்
பூண்டு உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது அழற்சி எதிர்ப்பி மற்றும் ஒரு ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்.
இஞ்சி முன்கூட்டியே ஆக்சிஜனேற்றத்தை தடுத்து கல்லீரல் உற்பத்தி செய்யும் சில கெட்ட கொழுப்புகளை ரசாயன மாற்றம் செய்வதை தடுக்கிறது. இஞ்சியும் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்.
நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க தேன் உதவுகிறது. இது நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன. இதன் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை சில குறிப்பிட்ட நோய்களை தடுக்கும் மற்றும் தேன் ஒரு சர்க்கரைக்கு மாற்றாக செயல்படுகிறது.
பானம் செய்வது?
தேவையான பொருள்கள்
பூண்டு 4
இஞ்சி 3
எலுமிச்சை சாறு சிறிதளவு
தண்ணீர் 8 கப்
தேன் 1 கப்
கேலன் தண்ணீர் 1
முதலில் பூண்டின் தோலை உரித்துக்கொண்டு அதனுடன் இஞ்சியை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மென்மையாக வரும் வரை நன்கு அரைத்து இதை விழுதுடன் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறுதியாக தேனை சேர்த்து கொள்ளவேண்டும்.
தேவைப்பட்டால் இந்த நீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி மூடிவைக்கவும். இதனை 5 முதல் 6 நாட்கள் வரை குளிர்ச்சியான மற்றும் இருட்டான இடத்தில் வைக்கவேண்டும். தேவைப்பட்டால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.
எப்படி இதை பயன்படுத்தலாம்?
கொழுப்பை குறைக்க இதை பயன்படுத்தலாம் ஆனால் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். கொழுப்பு அதிகளவு உற்பத்தி ஆவதை குறைப்பதற்கு இந்த பானத்தை காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பானத்தை தொடர்ச்சியாக அருந்தவேண்டாம். இதனுடன் சிறிது ஆப்பிள் வினிகரை சேர்த்தால் இன்னும் உடலுக்கு மேலும் நன்மை தரும்.
பானம் மிக அடர்த்தியாக இருந்தால் அதனுடன் சிறிது நீரை சேர்த்து பருகலாம். இதனை உணவிற்கு முன் உன்ன வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றன. ஒழுங்கான முறையில் இதனை தொடர்ந்து எடுத்து வாருங்கள் இதனுடன் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு கொலஸ்ட்ரால் அளவு சீராக உடலில் இருக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மாதம் மாதம் பரிசோதனை செய்வது மிக அவசியம் அவரின் ஆலோசனை பெற்று நடந்தால் கொலஸ்ட்ரால் எளிமையாக அளவை சீராக்க முடியம்.