அழகு குறிப்பு

சரும வறட்சிக்கு எவ்வாறு உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம்?

சரும வறட்சிக்கு எவ்வாறு உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம்?

முகம் வறட்சியில்லாமல் பொலிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் ஆனால் தற்போதய சூழ்நிலைகளில் அவ்வாறு இருப்பது என்பது மிக கடிமான விஷயம். இதனை சரி செய்ய பல தீர்வுகள் இருப்பினும் இயற்கை முறையியலான தீர்வே நல்ல பலன்களை கொடுக்கின்றன. நம் வீடுகளில் உபயோகப்படுத்தும் காய் வகையான உருளைக்கிழங்கு இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.முக வறட்சிக்கு உருளைக்கிழங்கை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

முக வறட்சி என்பது தற்போது அனைவருக்கும் ஏற்படும் ஒரு மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. முக வறட்சி ஏற்பட்டால் முகத்தில் சொர சொரப்பு ஏற்பட்டு முக பொலிவை இழந்துவிடும். இந்த பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு?

தேவையானவை

உருளைக்கிழங்கு
தயிர் 1 ஸ்பூன்

செய்முறை: உருளைக்கிங்கை கழுவி அதை எடுத்து கொள்ளவும் அதனை அறுத்து மிக்ஸியில் போட்டு சாறாக்கி கொள்ளவும். தயிரையும் நன்கு அடித்து இதனுடன் உருளைக்கிழங்கு சாறையும் சேர்த்து நன்கு கலவையாக்கி கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரை கொண்டு கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்வது மூலம் முக வறட்சியில்லாமல் முகம் பொலிவு பெரும். செயற்கை முறை கிரீம்களை உபயோகப்படுத்தாமல் இந்த மாதிரியான இயற்கை முறையில் முகத்தை அழகாக பராமரிக்கலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

Related posts

நீளமான மற்றும் கருமையான கூந்தல் வேண்டுமா? அப்போ குப்பைமேனி இலையை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள்.

healthyshout.com

வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்

healthyshout.com

ஆண்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும் எளிய இயற்கை வைத்தியம்?

healthyshout.com

Leave a Comment