உங்களுக்கு தெரியுமா? நாம் தினமும் உண்ணும் இந்த 7 உணவு பொருள்கள் குணப்படுத்தமுடியாத சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது

உங்களுக்கு தெரியுமா? நாம் தினமும் உண்ணும் இந்த 7 உணவு பொருள்கள் குணப்படுத்தமுடியாத சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது

முகத்தை அழகாக வைக்கவேண்டும் என்பது மனிதர்களாக பிறந்த அனைவர்க்கும் இருக்கும் விருப்பம். முகத்தில் சிறிது கொப்புளமோ அல்லது தழும்புகளோ வந்தால் நாம் அதையே எண்ணி வருத்தமடையும் நிலை கூட ஏற்படுகிறது. முகம் பொலிவாகவும் கொப்புளம் மற்றும் தழும்பு எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் ஆசை ஆகும். ஆனால் சில பேருக்கு மட்டுமே அவ்வாறு அமைகின்றன. பெரும்பாலானோர் முகத்தில் முகப்பரு, தழும்பு, வறட்சியான முகம் போன்றவை ஏற்பட்டு கொண்டே தான் போகிறது. உடலில் தோன்றும் மாற்றங்கள் நம் முகம் வழியாக தன நமக்கு தெரிய வருகின்றன.

ரோஸாசியா என்னும் சரும நோய் நாம் தினமும் சந்திக்கும் நபர்களில் பாதிபேர்க்காவது இந்த நோய் இருக்கும். இது ஆண்களை விட பெண்களையே பெரிதும் பாதிக்கின்றன. இந்த நோய் வருவதற்கான காரணம் நாம் உண்ணும் உணவுமுறைகள் தான் காரணம் ஆகும். நாம் தினமும் உண்ணும் சில உணவுகளால் நம் சருமத்தில் குணப்படுத்த முடியாத நோய்களை ஏற்படுத்துகிறது.

தக்காளி

சரும பாதிப்புகள் என்பது முகத்தில் ஏற்படும் கொப்புளம், முகப்பரு, சிவப்பான முகம், வறட்சியான தோற்றம் என பல்வேறு விதமாக இருக்கிறது. இது வருவது நாம் உண்ணும் உணவு பொருளில் ஹிஸ்டமைன் என்னும் பொருள் அதிகம் இருப்பதாலேயே என பல ஆய்வுகள் கூறுகிறது. ஹிஸ்டமைன் அதிகம் உள்ள பொருட்கள் சிட்ரஸ் பழங்கள், விதைகள், ஷெல்மீன்கள் போன்ற உணவுகளில் இருக்கிறது. இந்த மாதிரியான உணவு பொருட்களை உண்பதால் ரத்த ஓட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி மற்றும் முகத்திற்கும் பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது.

சாக்லேட்

சாக்லேட் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால் சாக்லேட் உண்பதால் முக பாதிப்புகள் ஏற்படுகிறதாம். ரோஸாசியா என்னும் நோயில் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஆய்வு செய்ததில் ஐந்தில் ஒருவற்கு அதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சாக்லேட்டில் உள்ள தெர்போமைன் என்பது தான். இது உடலில் ரத்த ஊத்தி அதிகரித்து சருமபாதிப்பை உருவாக்குகிறது.

ஆல்கஹால்

ஆல்கஹால் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். ரோஸாசியாவை அதிகரிக்கும் ஒரு பொருள் ஆல்கஹால் தான். ஆல்கஹால் எடுத்து கொள்வதால் சருமபாதிப்பு ஏற்பட்டு தோல் சிவப்பாக காட்சியளிக்கிறது. முகியுமாக ரெட் வைன் குடிப்பதால் இதன் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக ஆய்வில் கூறுகின்றனர்.

காரம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள்

கரைவகையை சார்ந்த உணவு பொருள்களான மிளகாய். மிளகு போன்றவை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதால் ரோஸாசியா பாதிப்புகள் அதிகளவு உண்டுபண்ணுகிறது. காரமான உணவுகளை அதிகம் சேர்ப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு அறிக்கையில் கூறுகிறார்கள். கார உணவுகளால் குடல் மற்றும் இரைப்பையில் ஏற்படும் பாதிப்புகளே இதற்கு காரணமாக இருக்க கூடும் என கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இறைச்சிகள்

பதப்படுத்தப்ட்ட இறைச்சிகளை உண்பதால் ரோஸாசியா நோய் ஏற்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இதற்கு காரணம் அதில் உள்ள சல்பைட் இது நமது சருமத்தில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது.

சூடான பானங்கள்

சூடான பானம் குடிப்பதால் ரோஸாசியா ஏற்படுகிறதா? ஆம் அதிக அளவு சூடாக பானம் குடிப்பதால் ரோஸாசியா ஏற்படும் என 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக சூடான பானம் வயிற்றுக்குள் செல்லும் போது இரைப்பை மற்றும் குடல் வீக்கம் ஏற்பட்டு ரோஸாசியா பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சூடு குறைவாக பானம் குடிப்பதால் அதன் பாதிப்பு குறையும்.

புளிப்பு சுவையுள்ள உணவுகள்

புளிப்பு சார்ந்த உணவுகளால் ரோஸாசியா பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. புளி, எலுமிச்சை போன்றவைகளை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

சிகிச்சை முறைகள்

நாம் உண்ணும் உணவுகளில் சில உணவுகள் நம் சருமத்தை பாதுகாக்கவல்லது அவ்வாறான உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் ரோஸாசியா போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படாமல் இருக்கும். இதனை தடுக்க உதவும் மஞ்சள், வெந்தயம், கேரட், அஸ்வகந்தா, தேன், போன்ற உணவுகள் சருமத்தை பாதுகாக்கவல்லது. இதனை உண்பதால் நம் சருமம் பொலிவாகவும் நோய் அண்டாமல் பாதுகாத்து கொள்ளமுடியும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *