உடல் ஆரோக்கியம்

தினமும் பசலைக்கீரை சாப்பிடுவதால் உடலுக்குள் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

தினமும் பசலைக்கீரை சாப்பிடுவதால் உடலுக்குள் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இறைச்சிகளில் உள்ள அளவு ஊட்டச்சத்துக்கள் கீரை வகைகளில் உள்ளது என்பது எத்தனை பேர்க்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கீரையில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் இருப்பது உண்மை தான். பெரும்பாலோர்க்கு கீரை என்றாலே பிடிக்காமல் இருக்கிறது. கீரையில் உள்ள மருத்துவ குணம் பற்றி அறிந்தீர்கள் என்றால் அதனை கட்டாயம் நமது அன்றாட உணவாக எடுத்து கொள்வீர்கள். பசலை கீரையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பசலை கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதை தினமும் உண்பதன் மூலம் நாம் எண்ணற்ற பயன்களை அடையலாம். பசலைக்கீரை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கீரை வகை பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டியது நமது உடலுக்கு அவசியம் என்பது அதன் நன்மைகளை அறிந்தால் தான் நமக்கு புரியும்.

பசலைக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பசலைக்கீரையில் எண்ணற்ற வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. அந்த வகையில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுகின்றன. அதுமட்டுமில்லாது இதில் பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து போன்றவையும் இதில் அதிக அளவு உள்ளன.

ரத்தசோகை உள்ளவர்கள்

பசலைக்கீரை ரத்தசோகை உள்ளவர்களுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. இதில் புரத சத்துக்களை பலப்படுத்தும் அமிலங்கள் இருக்கின்றன மற்றும் காரசத்து அதிகம் கொண்ட தாதுப்பொருள்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிகமானதாக இருக்கிறது இதனால் ரத்தசோகை உள்ளவர்க்கு ஹீமோகுளோபினை அதிகம் செய்து நன்மை அளிக்கக்கூடியது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பசலைக்கீரையை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை மிக எளிதாக நீங்கிவிடும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை அதிகரித்து நமது செரிமான மண்டலத்தை நன்கு வேலை செய்ய வைக்கிறது. இதனால் இதனை தினமும் உண்பவர் மலச்சிக்கல் எனும் பிரச்சனை இன்றி வாழலாம்.

தோல் நோய்கள்

தற்போது உள்ள சூழ்நிலை, உணவுமுறை மற்றும் புகைகளால் தோல் சார்ந்த நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது இதனை சரி செய்ய பசலைக்கீரை ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. தோலில் ஏற்படும் நோய்களான வெட்டை, நீர்த்தாரை, மேகநோய், போன்றவைகளை குணமாக்க கூடிய ஆற்றல் பசலைக்கீரைக்கு இருக்கிறது.

குழந்தைகளுக்கானது

குழந்தைகளுக்கு பசலைக்கீரையை தேன் சேர்த்து கலந்து கொடுத்து வந்தால் அவர்களுக்கு நீர்க்கோர்வை இருந்தால் குணமடையும்.

ஆண்களின் விந்து கெட்டியாகும்

ஆண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளில் ஒன்று விந்து நீர்த்து இருப்பது மற்றும் தூக்கத்தில் விந்து வெளியேறுதல் இதற்கும் பசலைக்கீரையை கொண்டு சரி செய்ய முடியும். பசலைக்கீரை மாற்றும் எலும்பிச்சை சாற்றை கலந்து தினுமும் குடித்து வந்தால் விந்து கெட்டிப்படும்.

தலைவலி

தற்போது உள்ள சூழ்நிலைகளில் தலைவலி என்பது அனைவர்க்கும் ஏற்படுகிறது. இதனால் பெரிய சிரமம் ஏற்படுகிறது என்பதால் மருந்து மாத்திரைகள் எடுத்து உடம்பை கெடுத்துக்கொள்கின்றனர். பசலைக்கீரையை நெருப்பில் லேசாக வதக்கி எடுத்து அதை தலைக்கு போட்டால் தலைவலி சரியாகும் மற்றும் மூளையின் நினைவு திறன் மேம்படும்.

கர்ப்பிணிகள்

பெண்கள் கருவுற்று அவர்களுக்கு குழந்தை பிறந்து பாலூட்டும் போது அவர்களுக்கு தேவையான சத்துக்களை இந்த பசலைக்கீரை கொடுக்கிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் அது பெண்களுக்கு ரத்த விருத்தியை அதிகரிக்கிறது.

எடையை குறைக்க

உடல் எடை அதிகமா இருப்பதனால் பலர் அவசதிப்படுகின்றனர். இதற்கு பசலைக்கீரையை உண்டு டயட்டில் இருந்து வந்தால் அதனால் ஏற்படும் மாற்றம் நமக்கு மிக விரைவாக தெரியும். பசலைக்கீரையில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி அளவும் குறைவாக இருப்பதால் நமது உடலின் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

எவ்வாறு உண்ண வேண்டும் என்பதை பார்க்கலாம்?

நாம் அனைத்து கீரைகளை போலவே இதையும் கடைந்து அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம் அல்லது கொத்தமல்லி கருவேப்பிலை போல பொடியாக்கி சாலட்டுகளில் தூவி சாப்பிடலாம்.

பசலைக்கீரையை சூப் செய்து குடித்து வரலாம். சூப் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அது மிக நல்லது. இதன் சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்ந்து குடித்து வரலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

 

Related posts

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்?

healthyshout.com

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..!!

healthyshout.com

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..?

healthyshout.com

Leave a Comment