குளிர்காலம் வந்தால் தோல் முகம் வறண்டு போகிறதா? அப்போ இதை பயன்படுத்தி சரிசெய்யுங்க.

குளிர்காலம் வந்தால் தோல் முகம் வறண்டு போகிறதா? அப்போ இதை பயன்படுத்தி சரிசெய்யுங்க.

காலம் என்பது கடந்துகொண்டே இருப்பது நாமும் அதில் பயணித்துக்கொண்டேதான் இருக்கிறோம். இதில் காலம் மாறினால் நம் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பல. குளிர்காலத்திலும் சரி வெயில் காலத்திலும் சரி நமக்கு சரும பிரச்சனை வருகிறது. குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்து குறிப்புகளை பயன்படுத்தி வறட்சியற்ற பொலிவான சருமத்தை பெறலாம்.

முன்னர் சொன்னது போலவே கால மாற்றத்தால் உடலில் எண்ணற்ற மற்றம் உண்டாகும். வெயில் காலத்தில் வியர்க்குரு, சூட்டு கொப்புளங்கள் போன்றவையும் குளிர்காலத்தில் சரும வறட்சியும் ஏறபடக்கூடிய பிரச்சினையே ஆகும். இவற்றை சில வழிகள் மூலம் சரி செய்யலாம்.

பாதம் மற்றும் கடலை மாவு

உங்கள் முக வளர்ச்சியை சரிசெய்ய இந்த பாதமே போதுமான ஒன்றாகும். எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

பாதம் 5

பால் 2 ஸ்பூன்

கடலைமாவு 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் அளவு

செய்முறை: முதலில் பாதாமை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும் அதன் பின் பாதாமை நன்கு அரைத்து அதனுடன் பால் சேர்த்து இறுதியாக கடலைமாவு எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்த பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். வாரத்திற்கு மூன்றுமுறை செய்தல் போதுமானது. வறட்சி சரியாகிவிடும்.

முட்டை வைத்தியம்

தோலின் வறட்சியை சரிசெய்யும் ஆற்றல் முட்டையின் வெள்ளைக்கருவிற்கு உண்டு. முட்டை தோலிற்கு தேவையான சத்துக்களை அளித்து வறட்சி ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்கிறது.

தேவையானவை:

முட்டை வெள்ளைக்கரு

தேன் 1 ஸ்பூன்

பால் 1 ஸ்பூன் அளவு

முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்துக்கொண்டு அதன் பிறகு தேன் மற்றும் பால் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்துகொள்ளவும். இப்போது அந்த கலவையை கொண்டு முகம் முழுவதும் தடவிக்கொள்ளவும் அவற்றை 20-30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்தால் வறட்சியை நீக்கிவிடலாம்.

தர்பூசணியும் மற்றும் தேன்

தர்பூசணி ஒரு நீர்ச்சத்து கொண்ட ஒரு அற்புதம் நிறைந்த பழம் ஆகும். சரும பிரச்னையை சரிசெய்ய சிறந்து தீர்வாக தர்பூசணி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேவையானவை:

தேன் மற்றும் தர்பூசணி சிறிதளவு

செய்முறை: தர்பூசணி எடுத்து அதனை சிறு துண்டுகளாக்கி அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை தேனுடன் சேர்த்து முகம் மற்றும் கை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்தல் சரும வறட்சி நீங்கி மென்மையாக மற்றம் அடையும்.

கற்றாழை

கற்றாழை பல்வேறு வித மருத்துவ குணங்களை தன்னுள் அடக்கிவைத்துள்ள ஒரு தாவரமாகும். அதில் உள்ள ஜெல்லை அரைத்து அல்லது அப்படியே முகத்தில் தடவினால் முக வறட்சி நீங்கி சருமம் பொழிவுபெற்று ஈரப்பதம் அடையும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அனைவர் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இவை தலைமுடி பிரச்சனை மட்டுமல்ல தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்து தீர்வாகும். இதனை முகம் மற்றும் கை கால்களில் தடவினால் வறட்சி நீங்கி முழுமையான ஈரப்பத சருமத்தை பெறலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published.