தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்?

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்?

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்?

தேன் என்பது நமக்கு கிடைத்த அருமருந்து என்றும் சொல்லலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. மலர்களில் உள்ள மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்படுவதே தேன் ஆகும். தேன் மிக நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. அதனை சேகரிக்க பல தேனீக்கள் இணைந்து வேலை செய்கின்றன. இவர்களை வேலைக்கார தேனீக்கள் என்றும் கூறலாம். தேன் மனிதனின் வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் திறன் கொண்டது.

தேன் பல நோய்களை சரி செய்யும் வல்லமை பெற்றது மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளதால், தேன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு உதவுகிறது. சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்து பொருளாக உபயோகப்படுத்தபடுகிறது. தேனை சேகரிக்க தேனீக்கள் உழைக்கின்றன, தேனி உழைப்பாலும் தேனின் மருத்துவ குணத்தாலும் நாம் அதை உபயோகித்து பல்வேறு நன்மைகளை அடைவோம். தேனின் நன்மைகள் நிறைய உள்ளன அதில் சில நன்மைகளை கூறுகிறேன் தெரிந்தகொண்டு அதிகம் பயன்படுத்துங்கள்.

மாய்ஸ்சுரைசர்

உடலில் மிகவும் முக்கியமானது சருமம். அதன் அழகை பெண்களாக இருதாலும் சரி ஆண்களாக இருதாலும் சரி அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தேன் உடல் சருமத்திற்கு ஒரு நல்ல மருந்து ஆகும். ஏனெனில் இதன் மருத்துவ குணம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் மற்றும் சருமத்தை பொழிவாக்கி, மிருதுவாக்கி அதன் தன்மையை தக்க வைக்கிறது.

சரும சுருக்கம்

சரும சுருக்கம் தற்போது சிறியவர்களுக்கு கூட வருகிறது. சரும சுருக்கம் ஏற்பட்டால் அது நம்மை வயதான தோற்றம் கொண்டது போல மாற்றிவிடும். இவ்வாறு சுருக்கம் ஏற்படாமல் இருக்க தேனை உபயோகப்படுத்தலாம். இதில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை மீண்டும் உயிர் பெறச்செய்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்

தேனில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள், தீக்காயங்களை சரி செய்யும் குணங்கள் இருக்கின்றன. பாக்டீரியாவிற்கு மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான பண்புகள் அதிகம் இருப்பதால் எளிதில் குணப்படுத்துகின்றன. தேன் காயங்களை சுத்தப்படுத்தி, நாற்றம் மற்றும் சீழ் உண்டாவதை தடுத்து விரைவில் வலியை குறைத்து காயம் குணமடைவதற்கு உதவுகிறது.

தேன் சேதமடைந்த சருமத்தை சீர்படுத்துகிறது மற்றும் சரும அழற்சி, தோல் பிரச்சனைகளை சரி செய்யும். சொரியாசிஸ், சிரங்கு, படை, போன்றவை தேனில் உள்ள பூஞ்சை எதிர்க்கும் பண்புகள் மூலம் சரி செய்யப்படுகின்றன. சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்றான்கள் பாதுகாக்கிறது.

தேன் சருமத்தின் உள்ள அழுக்கு, மற்றும் தூசுகளை நீக்கி முகப்பரு வராமல் தடுக்கிறது. இதனால் நோய்த்தொற்று மற்றும் முக பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தேன் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உதடுகள் பட்டு போல மிருதுவாக இருக்க தேன் உதவுகிறது.

வைட்டமின்கள் பி1, பி2, பி3, சி, பி6, பி௫ ஆகியவை தேனில் அடங்கியுள்ள சத்துக்களாகும். இவை அனைத்தும் நமக்கு மிகவும் அவசியமான சத்துக்கள் ஆகும். இதில் உள்ள கார்போஹைட்ரெட் உடலுக்கு ஆற்றல் அளித்து தசைகளை வலுவாக்குகின்றன.

தேன் தினமும் குடிக்கும் பழக்கம் உங்களிடமிருந்தால் இரத்தசோகை நோய் உங்களை அண்டாது. மேலும் கால்சியத்தை உறிஞ்சி ஹீமோகிளோபின் எண்ணிகையை அதிகப்படுத்துகின்றன. தேன் நமது உடலில் உள்ள சளியை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சுவாசப்பிரச்சனை மற்றும் சுவாசக்குழாயில் இருக்கும் நோய்த்தொற்றுகளை சரிசெய்கிறது. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் பண்பு தேனிற்கு உள்ளது இதனால் உடல் எடை குறையும் மற்றும் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க காலை தினமும் தேன் குடிக்க வேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருத்ததால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *