வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..!!

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..!!

கோடைகாலத்தில் அனைவர்க்கும் அதிகமாக ஏற்படக்கூடிய பிரச்சனை வியர்க்குரு. அதனை சில இயற்கை வழிகள் மூலம் சரிசெய்துவிடலாம். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு, சுத்தமான சந்தனம், கஸ்தூரி மஞ்சள்.

கோடைகாலத்தில் அதிக வெயில் இருக்கும் காரணத்தால் காற்றின் அளவு குறைவாகவே நமக்கு கிடைக்கிறது இதனால் ஏற்படும் வியர்வையின் காரணமாகவே வியர்க்குரு உருவாகிறது. இதனால் நிறைய சரும பிரச்சனைகள் ஏற்பட்டு உடலில் பல தோல்நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.

முதலில் வேப்பிலை, அருகம்புல், சந்தானம், கஸ்தூரி மஞ்சள் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து வியர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் வியர்க்குரு குணம் அடைந்து விடும்.

ஆண்கள் இதை முகத்திற்கு தேய்க்கும் போது கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் உபயோகப்படுத்தவேண்டும்..

நுங்கு

வெயில் காலங்களில் நமக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பொருள் நுங்கு ஆகும். இதை உண்ணும் போது உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும், மற்றும் வெயிலை தாங்கக்கூடிய சக்தியையும் நமது உடலிற்கு அளிக்கிறது. இதை உண்ணவும் செய்யலாம் அல்லது இதனை வாங்கி உடல் முழுவதும் தேய்த்து வந்தால் வியர்க்குரு இருந்த இடம் தெரியாமல் குணமாகும்.

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்

சுத்தமான சந்தனத்தை எடுத்து கொள்ளவும் இதனுடன் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்து உடலில் தேய்த்து வர வியர்க்குரு குணமடைந்து சருமம் பொலிவாகும். உடலில் உள்ள எரிச்சல், அரிப்பு அனைத்தையும் சரி செய்யும்.

கற்றாழை

சில பேருக்கு அதிகமான வியர்வை ஏற்படக்கூடும் அவ்வாறு இருப்பவர்களுக்கு சோற்று கற்றாழை ஒரு நல்ல தீர்வு ஆகும்.

சோற்று கற்றாழையை எடுத்து தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து ஜூஸ் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும்.

அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி கொள்ளவும். இதனை எடுத்து தொழில் தேய்த்து வர உடலில் உள்ள வியர்க்குரு குணமடையும்.

முகப்பரு உள்ளவர்களும் இதனை முகத்தில் தேய்த்து வரலாம். முகம் பொலிவு பெரும்.

தர்பூசணி

வெயில் அதிகம் கிடைக்கக்கூடியது தர்பூசணி. இதனை உண்பதால் உடல் குளிர்ச்சி அடைந்து வெயில் பாதிப்புகள் உடலில் ஏற்படாமல் இருக்கும்.

தர்பூசணி எடுத்து கொண்டு அதன் விதைகளை நீக்கி அதனை ஜூஸ் மாதிரி அரைத்து உடலில் தேய்த்து வந்தால் வியர்க்குரு குணமடைந்து சருமம் மிருதுவாகும்.

இஞ்சி

இஞ்சி எடுத்து கொண்டு அதனை தோல் நீக்கி சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிரியதளவு நீரினை ஊற்றி அறுத்த வைத்த துண்டுகளை எடுத்து நீரில் போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.

பின்னர் நீரின் சூடு குறைந்ததும் அதனை ஒரு காட்டன் பஞ்சு எடுத்து நீரில் நனைத்து தோல் மேல் தேய்த்து வரலாம்.

இதனால் வியர்குருவும் குணமடையும் தோலில் ஏற்படும் அரிப்பு எரிச்சல் போன்றவையும் சரியாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *