ஆண்களே முடி அடர்த்தி மற்றும் கருமை நிறமாக இருக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்..
ஆண்களே முடி அடர்த்தி மற்றும் கருமை நிறமாக இருக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்..
தற்போது உள்ள காலசூழ்நிலைகளில் ஆண்களுக்கு முடி அதிகம் கொட்டுகிறது. அவர்களின் உணவுகள் பழக்கவழக்கங்களே அவர்களின் முடி உதிர்விற்கு காரணமாக இருக்கிறது. ஆண்கள் முடி விழுவதை முதலில் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர் ஆனால் பின்னர் அதை நினைத்து வேதனை கொள்கின்றனர்.
இதற்கு இயற்கை முறையிலே தீர்வு காணமுடியும். இந்த முறையால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். கண்ட கண்ட வேதி பொருட்களை சேர்த்துகொள்வதால் முடியின் ஆரோக்கியம் பாதிப்பு அடைகிறது. இந்த பதிவில் இயற்கை முறை தீர்வுகளை குறிப்பிட்டுருக்கிறேன். இவைகள் உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
முடி கொட்டுதல் பிரச்சனை?
முடி கொட்டுதல் என்பது ஆண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஆண்களுக்கும் பெண்களை போலவே அழகை பற்றிய ஆசைகளும் கவலைகளும் நிறையவே உள்ளது. ஆனால் அதை எந்த ஆணும் அதை வெளிக்காட்ட விரும்புவதில்லை. முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, வழுக்கை, தலை வறட்சி போன்ற பிரச்சனைதான் ஆண்களுக்கு அதிகம் இருப்பது. அதற்கான தீர்வை இந்த பதிவில் காண்போம்..
இளநரையை சரிசெய்ய?
சில ஆண்களுக்கு இளநரை என்பது சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. தற்போது இருக்கும் உணவு மற்றும் பழக்கவழக்கமே இளநரை பிரச்னையை ஏற்படுத்துகிறது. ஆண்களின் இளநரையை சரிசெய்ய ஒரு அருமையான வைத்தியம் உள்ளது.
தேவையானவை:
செம்பருத்தி பூ 4-5
நல்லெண்ணென்னை 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
செய்முறை: செம்பருத்தி இதழை நன்கு காயவைத்து அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அவற்றை நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து ௨௦-௩௦ நிமிடம் வரை வைத்து சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இளநரையை விரைவில் சரிசெய்யமுடியும்.
வெங்காய சாறு
வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் முடியின் அடர்த்தியை அதிகம் செய்யக்கூடியது. அதுவும் இல்லாமல் அது எளிதில் கிடைக்கும் ஒரு பொருள் ஆகும் இதை கொண்டு முடியின் அடர்த்தியை அதிகரிக்க முடியும்.
தேவையானவை:
தேன் 1 ஸ்பூன்
வெங்காயம் 1
வெங்காயத்தை எடுத்து அதனை நறுக்கி கொண்டு அதன் சாறு வரும்படி நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றில் சிறிதளவு தேன் சேர்த்து தேவைப்பட்டால் யோகர்ட் சேர்த்து கொள்ளலாம். 25-௩௦ நிமிடம் ஆன பிறகு தலையை சீகைக்காய் போட்டு நன்கு அலசவும். இவ்வாறு வாரம் 3 முறை செய்து வந்தால் முடி அடர்த்தி அதிகரிக்கும்.
முடி நன்றாக வளர
முடி உதிர்வு இல்லாமல் முடி நன்றாக வளர ஒரு சிறப்பான வைத்தியம் இது.
தேவையானவை:
முட்டைவெள்ளைக்கரு 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் அளவு
தயிர் 1 ஸ்பூன்
மருதாணி போடி சிறிதளவு
டீ டிகாஷன் 1 ஸ்பூன் அளவு
முட்டையை நன்றாக அடித்து அதனுடன் சேர்த்து தயிர், டிகாஷன், மருதாணி பொடி, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்தநாள் காலையில் தலையில் தேய்த்து 1 மணி நேரம் களைத்து தலைக்கு குளிக்கவும். இந்த முறை வைத்தியம் முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு அழகு சம்மந்தப்பட்ட வைத்தியங்களில் முக்கிய பங்கு வகிக்கறது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதனை துண்டுகளாக நறுக்கி அரைத்து அதன் சாற்றை தலையில் தடவிவரவும். இதில் உள்ள வைட்டமின்கள் எ, பி, சி முடியை நன்றாக வளரவைக்கும் திறன் கொண்டது.
ஆலிவ் எண்ணெய்
முடியின் வளர்ச்சி அதிகரிக்க எண்ணெய் ஒரு சிறந்த பொருளாகும் அதிலும் ஆலிவ் ஆயில் முடியின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எண்ணெய் பொருளாக விளங்குகிறது. ஆலிவ் எண்ணையை வாரம் 2 அல்லது 3 முறை தலையில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து தலைக்கு குளித்து வந்தால் முடி நன்கு அடர்த்தியுடன் வளரும்.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்..