யோகா

உடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..

உடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..

உலகில் உள்ள ஒவொருவருக்கும் மன அமைதி என்பது கண்டிப்பாக தேவைப்படுபவையாக இருக்கிறது. மன அமைதி என்பது அனைவர்க்கும் ஏற்படுவதில்லை. தினம் தினம் பல பிரச்சனைகளை சந்தித்து மன அமைதி என்பதையே இழந்து விடுகின்றனர். இதனை சில உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக மன அமைதி மற்றும் உடல் அழகை பெறலாம். பங்கஜ முத்திரை இது எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பங்கஜ முத்திரை செய்முறை:

தரையில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து இருக்க வேண்டும். நெஞ்சு குழிக்கு நேராக கைகள் உடலில் ஓட்டத்தை வண்ணம், ஒரு தாமரை மலர்களை போல வைத்து இரண்டு கைகளின் கட்டைவிரல் மட்டும் சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க வேண்டும். மற்ற அனைத்து விரல்களையும் எவ்வளவு முடியுமோ அந்த அளவு மலர்ச்சியாக படத்தில் உள்ளவாறு விரித்துவைத்து கொள்ளவேண்டும்.

நம் கண்களை 30 நிமிடம் வரை மூடி அமைதியாக அமர்ந்திருக்கவேண்டும். மன அழுத்தம் உள்ளவர்கள் கைகளை தாமரை மொட்டு இதழ் விரிப்பது போன்று முதலில் கைகளை குவித்து அதன் பின்னர் விரல்களை மெதுவாக விரிக்க வேண்டும். இந்த மாதிரி தொடர்ந்து 3 நிமிடம் வரை செய்யலாம்.

நாள்தோறும் அதிகாலை இந்த ஆசனம் செய்வது நல்ல பலனை தரும் .
இந்த யோகா பயிற்சியை குளிர் காலங்களில் செய்வதை தவிர்த்தால் நல்லது. நெஞ்சில் சளி கட்டும் என்பதால் குளிர் காலங்களில் தவிர்க்க வேண்டும்.

இந்த முத்திரை பயிற்சி 15 முதல் 45 நிமிடம் வரை செய்யலாம். 45 நிமிடம் செய்வதால் மன அழுத்தத்திலிருந்து விரைவில் நிவாரணம் அடையலாம்.

பங்கஜ முத்திரை செய்வதால் ஏற்படும் பலன்கள்:

பங்கஜ முத்திரை நமது மனதை மலரச்செய்யும். நம்மை மன அமைதியுடன் இருக்க செய்து உடலை நோயின்றி பாதுகாக்கிறது.

மனதில் ஏற்படும் சலனம், தேவையற்ற கோபம், பதற்றம் ஆகியவற்றை நீக்குகிறது. முகத்தில் பொலிவடைய செய்து தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

மனம் தெளிவு பெறுவதால் சிந்தனைகள் வளமடைகின்றன. பிள்ளைகளுக்கு ஞாபக சக்தியை கொடுத்து கல்வியில் ஈடுபாடுடன் இருப்பார்கள்.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி நரம்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது.

மன அமைதி அடைந்து உடலை அழகாக மாற்றுகிறது. இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

Related posts

யோகா செய்வதன் மூலம் பலவித நோய்களை சரிசெய்யலாம்…?

healthyshout.com

உடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..!!

healthyshout.com

மன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை

healthyshout.com

Leave a Comment