முதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..!
முதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..!
தற்போது உடலில் கை, கால், முதுகு வலி இருப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். இந்த வலிகளால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்கு சில யோகா பயிற்சிகளை மேற்கொண்டாலே போதுமானது. அதில் ஒன்று தான் சுப்த வஜ்ராசனம் ஆகும். எவ்வாறு செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்முறை:
முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டி உட்காரவேண்டும். வலதுகாலையும் இடதுகாலையும் பாதம் பின்னோக்கி பார்த்திருக்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். படத்தில் காட்டியவாறு கால்களின் மேல் புட்டங்களை அமர்த்தி வஜ்ராசன இருக்கைக்கு வரவேண்டும்.
மூச்சினை உள்ளிழுத்து கொண்டு முழங்கைகளின் உதவியால் மல்லாந்த நிலையில் உடலை வைக்க வேண்டும். சாதாரண சுவாச நிலையில் இரு கைகளையும் மடக்கி ஒன்று மீது ஒன்று வைத்து தலையை கடத்தவும். இந்த நிலையிலே 5 வினாடிகள் இருக்க வேண்டும். இந்த மாதிரி 5 முதல் 6 முறை செய்து வர வேண்டும்.
இதனுடைய பலன்கள்:
நம் உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கும்.
முதுகு மற்றும் கால்களுக்கு வலிமை பெருகும்.
முழங்கால், மற்றும் கணுக்கால்களின் பிடிப்புகள் நீக்கி வலுப்பெற செய்யும்.
தைராய்டு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கிறது.
மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளித்து உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.