மென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..!

மென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..!

அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக தான் இருக்கும். ஆனால் அது அனைவர்க்கும் கிடைக்க வாய்ப்பில்லை. அவ்வாறு கிடைக்காதவர்கள் சில வழிமுறைகள் மூலம் தான் அழகான கூந்தல்களை பெற முடியும். தற்போது இருக்கும் சுற்றுச்சூழல் நமது முடிக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்திப்பாருங்கள்.

சூடுபடுத்திய எண்ணெய்

சூடுபடுத்திய எண்ணெய் நம் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வருவதால் நம் முடியின் வளர்ச்சியை அதிகரித்து முடியை மென்மையாக வளரவைக்கிறது. நம் உடலையும் குளிர்வடைய செய்கிறது. மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து தலைக்கு மசாஜ் செய்து வரலாம்.

கற்றாழை

கற்றாழை இது முடியின் பாதுகாப்பிற்காக உபயோகப்படுத்தக்கூடிய முக்கிய பொருள் ஆகும். செயற்கையாக உபயோகிக்கும் பொருள்களில் கூட கற்றாழையை சேர்த்து கொள்கின்றனர். இந்த கற்றாழையை தலையில் தேய்த்தால் உடல் குளிர்ச்சியடைந்து தலைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. இதன் மூலம் முடியின் ஆரோக்கியம் மேம்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் இதை நீரில் கலந்து தலைக்கு தேய்த்து வரவேண்டும். இது தலைக்கு ஒரு கண்டிஷனராக செயல்படுகிறது. இது முடியின் ஆரோக்கியத்தை படிப்படியாக அதிகரிக்க செய்து நல்ல வளர்ச்சியை அளிக்கும்,

முட்டை

முட்டையில் உள்ள ஊட்டசத்துக்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது. இது தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து நீரை கொண்டு ஒரு மென்மையான ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நம் முடியின் ஆரோக்கியம் வளர்ச்சியடைந்து முடி மென்மையாகவும் இருக்கும்.

தயிர்

தயிரில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இதில் உள்ள B5 மற்றும் ட சத்துக்கள் முடியை நன்கு வளர்ச்சி அடைய செய்கிறது. தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு கழுவினால் முடியின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இது தலைமுடியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *