தொப்பையை குறைக்க உதவும் யோகாப்பயிற்சி

தொப்பையை குறைக்க உதவும் யோகாப்பயிற்சி

மனிதர்க்கு உண்ணும் உணவால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவு நல்லதாகவும் சரியான நேரத்திலும் எடுத்துக்கொண்டால் அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நிறைய பேர் அவ்வாறு உணபதில்லை. வெளியில் விற்கும் கண்டா பொருள்களையெல்லாம் ருசிக்காக வாங்கி உண்கின்றனர். இவ்வாறு உண்பதால் வயிறு பெருத்து தொப்பை ஏற்படுகின்றன.

தொப்பையை குறைக்க நிறைய வலிகள் இருக்கின்றன ஆனால் அதையெல்லாம் நாம் செய்தல் தான் குறையும். யோகா பயிற்சி மூலம் நாம் தொப்பையை குறைக்க இயலும். யோகா பயிற்சியில் சலபாசனம் என்கின்ற ஆசனம் மூலம் நம் வயிற்றிலிருக்கும் குடல், இரைப்பை, மற்றும் பித்தப்பை போன்றவைக்குகளுக்கு நன்மை ஏற்படுத்தி தொப்பையை குறைக்க முடியும்.

தொப்பை ஆண்கள் மற்றும் பெண்கள் இருகிவருக்கும் இருக்கின்றன, அவர்கள் உந்த ஆசனத்தை முயற்சி செய்வதால் தொப்பையை குறைத்து வயிறு சாதாரன நிலையை அடையும்.

சலபாசனத்தை எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்:

முதலில் நாம் குப்புறபடுத்து முகத்தை கீழ் தரையில் படும்படி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் கைகளை பின்னே நீட்டிக்கொள்ளவும் மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும். காய் மற்றும் கால்களை படத்தில் கட்டியுள்ளவாறு நாங்க விறைப்பாக வைத்து ஒரு 10 முதல் 15 வினாடி வரை இருக்க வேண்டும் இவ்வாறு மூன்று முறை உயரே நம் உடலை தூக்கி இறக்க வேண்டும். முதலில் ஒவொரு காலாக தூக்கி பழக்க முயற்சி செய்யலாம்.

இந்த ஆசனத்தின் மூலம் பெரும் நன்மைகள்:

வயிற்றில் உள்ள தசைகள் வலுப்பெறும், பெருங்குடல் மற்றும் சிறுகுடல் வலுப்பெற்று நன்கு வேலை செய்யும். மலசிக்கல், கல்லீரல். மண்ணீரல் கணையத்தில் உள்ள பிரச்சனைகளில் நல்ல தீர்வை தரும். முதுகு மற்றும் இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைகள் நீங்கி வயிற்றில் உள்ள தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

இதில் கூறியவாறு ஆசனத்தை முயற்சி செய்து பாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.