தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இந்த யோகா முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்:

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இந்த யோகா முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்:

தூக்கம் என்பது காசு கொடுத்து வாங்கும் விஷியமல்ல என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அது மன அமைதியின் மூலமே கிடைக்க பெரும் பொக்கிஷம் என்றே கூறலாம். மன அமைதி என்பது தற்போது அனைவரிடமும் இருப்பதில்லை இதனால் நிறைய பேர் உறக்கம் இன்றி தவிக்கிறார்கள். தூக்கம் இல்லை என்றல் ஒரு மனிதனின் நிம்மதி மற்றும் உடல் இரண்டுமே கெட்டு போய்விடும். யோகா செய்வதன் மன அமைதியும் துக்கமும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் எவ்வாறு செய்வது என்பது தான் நமக்கும் தெரியவில்லை. தூக்கம் வருவதற்கான யோகா முத்திரையை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

யோகா முத்திரை

இந்த யோகா கைகளின் மூலம் செய்வது ஆகும். கைகளை எவ்வாறு வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்

வலது கை:

வலது கையின் ஆள்காட்டி விறல் மற்றும் கட்டை விரலின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொட்டிருக்க வேண்டும். மீதமுள்ள விரல்கள் நீட்டி இருத்தல் வேண்டும்.

இடது கை:

இடது கையின் சுண்டு விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும் ஒன்றோடு ஒன்று தொட்டிருக்கவேண்டும். மற்ற விரல்கள் அனைத்தும் நீட்டி இருத்தல் வேண்டும்.

இதை செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:

தூக்கமே ஏற்படுவதற்கு முக்கிய கரணம் உயர் ரத்த அழுத்த பிரச்சினையே ஆகும். இந்த முத்திரையின் மூலம் சீரான ரத்த அழுத்தம் உடலுக்கு செல்கிறது.

உணவு உண்ட பின்பு ஒரு அரை மணி நேரம் கழிந்த பின்பு படுக்கைக்கு சென்று இந்த முத்திரையை செய்யலாம்.

தூக்கம் வராதவர்கள் இந்த முத்திரையை தினமும் தூங்கும் முன்பு செய்வதன் நல்ல நிம்மதியான தூக்கம் ஏற்படும். இந்த முத்திரையை செய்யும் போதே தூக்கம் வந்துவிடும். தூக்க மாத்திரையை உபயோகப்படுத்துபவர்கள் இந்த முத்திரையை முயற்சி செய்து தூங்க முயற்சிக்கலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.