செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும் பூஷன் முத்திரை
செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும் பூஷன் முத்திரை
மனிதர்களுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் கூட செரிமானம் என்பது சரியாக நடந்து விட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போது உண்ணும் உணவுகள் விரைவாக செரிமானம் அடைய நேரம் எடுக்கிறது. இதனால் உடலில் செரிமான பகுதி பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறது. ஒருவருடைய செரிமான திறன் பொறுத்தே அவருடைய உடலின் ஆரோக்கியம் இருக்கிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு செரிமானத்தை அதிகரிக்க சில மருந்துகள் இருப்பினும் உடற்பயிற்சி செய்து அதை சரிசெய்வதே உடலுக்கு நன்மை தரும்.
செரிமானத்தை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சி பூஷன் முத்திரை
செய்முறை:
வலது கை
வலது கையில் உள்ள கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனிகளை தொட்டு இருக்கமாறு வைக்கவேண்டும் மற்ற விரல்கள் அனைத்தும் நீட்டி இருக்கவேண்டும்.
இடது கை
இடது கையில் உள்ள கட்டை விரல் நுனியும் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனியுடன் தொட்டு இருக்குமாறு வைக்கவேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்குமாறு வைக்க வேண்டும்.
விரிப்பின் மீதோ அல்லது தரையின் மீது அமர்ந்து 15 -20 நிமிடம் என ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.
பூஷன் முத்திரை செய்வதால் ஏற்படும் பலன்கள்
நாம் சாப்பிடும் உணவுகள் செரினாமம் ஆகவும், செரித்த உணவுகளை வெளியேற்றவும் மற்றும் செரிமான உறுப்புகளான சிறுகுடல், கல்லீரல், மண்ணீரல் பெருங்குடல் போன்றவைகளுக்கு செரினாம சக்தியை அளிக்கிறது.
நரம்பு மண்டலத்தை முழுவதும் பாதுகாக்கிறது. நரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. நரம்புகளால் உருவாகும் வலியை குறைக்கிறது.
வயிறு பெருத்தல், வயிற்றில் வலி ஏற்படுதல், வாயுத்தொல்லை மற்றும் மந்த உணர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது
உடல்சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியாகவும் மற்றும் மூளை செயல்பாட்டை சீராகவும் வைக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.