யோகாசனமும் அதன் பயன்களும்…!!
யோகாசனமும் அதன் பயன்களும்…!!
இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிக கடினமான விஷியமாக இருக்கிறது. நாம் உண்ணும் உணவு மற்றும் சூழ்நிலையின் காரணமாக உடலுக்கு எண்ணற்ற தீங்கு வருகிறது. இதற்கான ஒரு நல்ல தீர்வாக யோகா அமைகிறது. யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் அமைதியான வாழ்வும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கும். இந்த பதிவில் சில யோகாசனுமும் அதன் பயன்களையும் பற்றி காண்போம்.
விருக்ஷா ஆசனம்:
விருக்ஷா ஆசனம் இது உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் கை, கால், தொடை, முதுகு, தோள்பட்டை நன்கு பலப்படுத்துகின்றன. மன ஒருமைப்பாட்டையும் கொடுக்கிறது.
உதன் ஆசனம்:
உதன் ஆசனம் இது கால் மற்றும் இடுப்பை பலப்படுத்தும் ஆசனம். இது பெண்களுக்கான சிறந்த ஆசனம் ஆகும். அவர்களின் கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
நகுல் ஆசனம்:
நகுல் ஆசனம் இது நம் இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளை பலப்படுத்துகிறது. இடுப்பு பகுதியில் உள்ள சதைகளை குறைக்க இந்த ஆசனம் பெரிதும் உதவுகிறது. உண்ணும் உணவின் செரிமானத்தையும் சீராக்குகிறது.
சக்கி சலான் ஆசனம்:
சக்கி சலான் ஆசனம் இது நரம்பு மண்டலத்தையும் வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. இது வயிற்று பகுதியை பலப்படுத்துவதால் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் இதனை செய்வதால் வயிற்று பகுத்து பலம் அடையும். மேலும் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்யும் மற்றும் கர்ப்பகாலத்தில் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் மட்டும் செய்து வரலாம்.
பரிவிர்த்தி ஜானு ஆசனம்:
பரிவிர்த்தி ஜானு ஆசனம் இது கல்லீரல், சிறுநீரகம்,மற்றும் வயிற்று பகுதியை பலப்படுத்துகிறது. தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் சிறந்த மருத்துவமாக இருக்கிறது.
கோமுக ஆசனம்:
கோமுக ஆசனம் இது நம் உடலின் இடுப்பு, தொடை, மார்பு, தோள்பட்டையை பலப்படுத்தும்.
தனுர் ஆசனம்:
தனுர் ஆசனம் இது முதுகுப்பகுதி, வயிற்றுப்பகுதியை பலப்படுத்துகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
வியாகராசனம்:
வியாகராசனம் இது முதுகு தண்டுவடத்தை பலப்படுத்துகிறது. நமது உடலின் தொடை இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகளின் சதை பிடிப்பை குறைக்கும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
உதர் ஆசனம்:
உதர் ஆசனம் இது இடுப்பில் சதையை குறைக்கும். தோள்பட்டையை விரிவு படுத்தும். மலச்சிக்கலை சரி செய்யும். நாளமில்லா சுரப்பிகளை துரிதப்படுத்தும்.
நடராஜ ஆசனம்:
நடராஜ ஆசனம் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. கணுக்கால், தொடை, மார்பு, வயிறு, இடுப்பு பகுதியை பலப்படுத்தும் செரிமானத்தை சரி செய்யும், மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
அர்த்த சந்திரா:
அர்த்த சந்திரா இது செரிமானத்தை சீர்படுத்தி, மன அழுத்தத்தையும் மற்றும் மனதில் ஏற்படும் பதற்றத்தைக்குறைக்கும்.
சக்ராசனம்:
சக்ராசனம் இது இதயத்திற்கு சிறந்த ஆசனம். ஆஸ்துமா உள்ளோருக்கும் பலன்களை அளிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. தைராய்டு மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளை துரிதப்படுத்துகிறது. உடல் ஆற்றலை மேம்படுத்துகிறது.
ஹாலாசனம்:
ஹாலாசனம் இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
சர்வாங்காசனம்:
சர்வாங்காசனம் இது உடலில் ரத்த மண்டலத்தையும் சுவாச மண்டலத்தையும் செரிமான உறுப்புகளுக்கும் தேவையான ஆற்றலை இந்த ஆசனம் கொடுக்கிறது. இந்த ஆசனம் செய்வதன் மூலம் தொண்டைக்கு அதிக அளவு ரத்த ஓட்டத்தை அளித்து தைராய்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது முடி உதிர்தல் பிரச்னையை சரிசெய்கிறது.
விப்ரீத் கரணி:
விப்ரீத் கரணி இது ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் இனப்பெருக்க ஆற்றலை அதிகப்படுத்துகிறது. செரினாமத்தை பலப்படுத்தும். கண் காது போன்றவைகளுக்கு இந்த ஆசனம் நல்ல பலன் அளிக்கிறது.
மஹாபந்தன ஆசனம்:
மஹாபந்தன ஆசனம் இது செய்வதன் முழுவதும் நல்ல முழுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தை போக்குகிறது.
மஹாமுத்ராசனம்:
மஹாமுத்ராசனம் உடலில் அதிகப்படியான பிராண சக்தியை கொடுத்து உடலை சீராக்கும்.
சவாசனம்:
சவாசனம் இது எந்த ஆசனம் செய்தாலும் இறுதியில் கண்டிப்பாக செய்யவேண்டிய ஆசனம் ஆகும். நாம் பயிற்சி செய்து இழந்த ஆற்றலை மீண்டும் பெறுவதற்கான ஆசனம் ஆகும்.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.