உடலுக்கு நல்லது என நினைத்து நாம் தினமும் செய்யும் தவறுகள்..!!
உடலுக்கு நல்லது என நினைத்து நாம் தினமும் செய்யும் தவறுகள்..!!
நம் அன்றாட வாழ்க்கையில் உழைப்பது எதற்காக? நாம் நலமாக இருக்கவும் நம் குடும்பம் நன்றாக இருப்பதற்கும் தான். ஆனால் இவ்வாறு உழைத்தும் நம் உடலுக்கு நல்லது எது கெட்டது எது என தெரியாமல் நிறைய பேர் நல்லது என சில வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இது நம் தலையில் நாமே மண்ணைவாரி போட்டதுபோல் இருக்கும். நம் உடல் ஆரோக்கியத்தை சில வலிகள் மூலம் மேம்படுத்தலாம் ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் செய்ய வேண்டும் இல்லை அதுவே நமக்கு ஒரு ஆபத்தாக முடிந்து விடும்.. நாம் நல்லது என நினைத்து தினமும் செய்யும் தவறுகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
நம் உடம்பை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் நிச்சயம் இருக்கும். ஆனால் அதை சரியாக செய்வது என்பது மிக கடினமே ஆகும்.
1. நம்மில் பலர் நீரை அருந்துவது நல்லது என நினைத்து நிறைய தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொண்டிருப்போம் ஆனால் அதிகமான தண்ணீர் அருந்துவதும் தவறான செயலே ஆகும். நம் உடலுக்கு தேவையான அளவு நீர் சத்து இருந்தாலே அது போதும். அதிகம் தண்ணீர் அருந்தினால் உடல் பருமன், அதிக வேர்வை, உடல் துர்நாற்றம் ஆகியவை வரக்கூடும். தண்ணீர் நல்லது தான் உடலுக்கு ஆனால் அதிகம் அருந்துவது தவறு.
2. நாம் வெளியில் செல்லும் போது ஹோட்டலில் கிடைக்கும் வாட்டர் பாட்டில்களையே அதிகம் வாங்கி நீர் அருந்திருக்கிறோம். ஆனால் மினெரல் வாட்டர்களில் சாதாரண நீர்கிலில் இருக்கும் சத்துக்கள் குறைந்து இருக்கின்றன.
3. இன்றைய நிலையில் நிறைய பேர் தூங்காமல் வேலை செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். அதிகமாக வேலை செய்து உடலை சரிவர கவனிக்காமல் விடுமுறை நாட்களில் தூங்கியே கழிக்கின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு தூங்கும் நேரத்தில் சரியாக தூங்க முயற்சி செய்ய வேண்டும்.
4. பற்களை சுத்தமாக வைப்பது நல்லது தான் ஆனால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் பற்களை விளக்குவது தவறு இதனால் பற்கள் தனது வலிமையை இலக்க நேரிடும். காலை இரவு இரு வேளைகளில் பற்களை விலகினால் போதுமானது.
5. ஒரு சில பேர் உடலை ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்து கொள்கின்றனர். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஊட்டச்சத்து மாத்திரைகளை உண்பது உடல்நல பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
6. உடற்பயிற்சி செய்வது என்பது நல்லது தான் ஆனால் ஒரு சிலர் அதிகமாக உடர்மயிற்சி செய்து உடலை மிகவும் கஷ்டப்படுத்திக்கொள்கின்றனர். இதனால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படகூடும்.
நாம் நல்லது நினைத்து செய்யும் தவறுகள் இன்னும் நிறைய இருக்கிறது. எனவே நம் உடலுக்கு நல்லது எது என அறிந்து அதை அளவோடு செய்ய வேண்டும்.