உடலிற்கு வலிமையை கொடுக்கும் சாமைக்கஞ்சி..!

உடலிற்கு வலிமையை கொடுக்கும் சாமைக்கஞ்சி..!

 

நம் முன்னோர்கள் பலர் சோற்றை அதிகமாக உண்டதே இல்லை என்பதே உண்மை. ஏனெனில் அவர்கள் அதிகம் உண்டு வாழ்ந்தது கேழ்வரகு, கம்பு, போன்ற தானிய வகைகள் ஆகும். இதனாலேயே அவர்கள் பலம் நிறைந்தவர்களாக இருந்தனர். எவ்வளவு நேரம் வேலை செய்தலும் சோர்ந்து போகாதவர்களாக இருந்தனர். இவ்வாறு நாமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நீங்கள் கண்டிப்பாக தானிய வகைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

இந்த வகைகளில் ஒன்றான சாமைக்கஞ்சி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்?

சாமைக்கஞ்சி செய்முறை:

தேவையானவை

சாமை மாவு 50 வறுத்து எடுத்து கொள்ளவேண்டும்.
கடலை பிண்ணாக்கு மாவு 25 கிராம் வறுத்து எடுத்து கொள்ளவேண்டும்.
உளுந்தம் மாவு 25 இதையும் வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெல்லம் 20 கிராம்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வெல்லத்தை போட்டு கரைத்து கொள்ளவும். அதன்பின்னர் வறுத்து எடுத்து வைத்துள்ள மாவுகளை போட்டு வெல்லத்துடன் சேர்த்து தண்ணீரில் கலக்கி கொண்டே இருக்கவும். நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி விடவும். மிதமான சூட்டில் குடிக்கலாம்.

இதன் பயன்கள்:

இந்த உணவு பொருளானது உடம்பிற்கு அதிக சக்திகளை கொடுக்க வல்லது. இதில் உள்ள புரதம் உடலிற்கு தேவையான வலிமையை அளிக்கிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அதிகம் பயன்படக்கூடியது. இது உண்பதால் உடலில் கொழுப்புகள் சேர்வது இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *