முகப்பரு உள்ளதா? கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..!

முகப்பரு உள்ளதா? கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..!

இந்த காலகட்டத்தில் உண்ணும் உணவு பழக்கம் மற்றும் காற்று மாசு போன்றவைகளால் இன்றைய இளம் வயது உள்ளவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை முகப்பரு ஆகும். இந்த முகப்பருவால் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் அழகையும் சேர்த்து இழந்து விடுகிறார்கள். இதனயலே முகப்பரு ஒரு பெரிய பிரச்னையாக உருவாகிறது எனலாம். இவ்வாறு இருப்பதால் முகத்தை பாதுகாக்க வேண்டும் என கண்ட பேஸ் வாஸ்களை வாங்கி உபயோகப்படுத்தி முகத்தி பொலிவை இழந்து விடுகிறார்கள்.

முகப்பருவிற்கான தீர்வுகளை பார்க்கலாம்:

நாம் பேஸ் வாஸ்களை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம். அனால் அந்த பேஸ் வாஸ் மிதமானதாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.

முகப்பரு வருவதற்கான ஒரு பிரச்சனை தலையில் இருந்து எண்ணெய் வடிவதால் கூட இருக்கலாம். இதனால் வாரத்தில் ஒரு முறையாவது ஷாம்பு கொண்டு தலையை சுத்தம் செய்யவேண்டும்.

நம் முகத்தினை தனியாக துண்டு மற்றும் அல்லது நமக்கென ஒரு துணி எடுத்து வைத்து அதில் துடைக்கவேண்டும். தலையை துடைத்த துண்டில் முகத்தினை கழுவ கூடாது.

ரோஸ் வாட்டர் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்போம் அதில் ஈஸ்ட் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து முகத்தினில் போட்டு மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவாகும். முகப்பரு வருவதை தடுக்கும்.

முல்தானிமெட்டி மற்றும் துளசி இலை பவுடர், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.

கல்லை மாவு கொண்டு முகத்திற்கு தடவி வந்தாலும் முகப்பரு குறைந்து முகம் பொலிவு பெரும்.

வேப்பிலை பவுடர் கொண்டு ரோஸ் வாட்டரில் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வரவேண்டும். இது முகப்பரு வருவதை குறைத்து விடும்.

பட்டை தூளில் தேன் கலந்து தடவி அதை ௧௫ நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். ஓரிரு மாதங்களில் முகப்பரு காணாமல் போய்விடும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.