உடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது? எதனால் குறைவாக உள்ளது? என்ன சாப்பிடலாம்?

உடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது? எதனால் குறைவாக உள்ளது? என்ன சாப்பிடலாம்?

மக்னீசியம்  என்பது மனித உடலிற்கு தேவையான பல்வேறு வகையில் உதவுகின்ற மினரல் ஆகும். அது நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான முக்கியமான ஒன்றாகும். மக்னீசியம் குறைவாக உள்ளதை நாம் ஒரு போதும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

மக்னீசியம் குறைவாக உள்ளதை கீழ்வரும் சில அறிகுறிகள் சிலவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு குறைவாக இருந்தால் பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது. மீண்டும் மக்னீசியத்தின் அளவை அதிகரிப்பதறகான முயற்சிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

நன் மேற்கூறியவாறு நாம் உடலில் உள்ள மக்னீசியத்தின் அளவை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

மூட்டுவலி

தசை பிடிப்பு ஏற்படுதல்

இதய துடிப்பு சீரற்று இருப்பது.

தலைவலி ஏற்படுவது

வாயைச் சுற்றிலும் வெள்ளைப்படலம் ஏற்படுதல்

உயர் ரத்த அழுத்தம்

கண்ணிமைகளில் வலி ஏற்படுதல்

தூங்கி எழும்போது உடலில் சோர்வு ஏற்படுவது

வாந்தி மயக்கம்

சுவாசப்பிரச்சனை மற்றும் மார்பில் வலி ஏற்படுதல்

மலச்சிக்கல்

தேவையில்லாமல் கோவம் வருவது

அதிக அளவு சாக்லேட் மற்றும் உப்பு சாப்பிடுவது

தேவையான அளவு மக்னீசியம்

நம்முடைய உடலிற்கு தேவையான அளவு மக்னீசியம் இருந்தால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

தசைகள் தளர்வாக இருக்கும்

இதய தசைகள் மற்றும் மார்பு பகுதிகள் உறுதியாக இருக்கும்

மன அழுத்தம் இன்றி இருக்கலாம்

ஆஸ்துமா கட்டுக்குள் வரும்

நிம்மதியான உறக்கம்

கொலஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும்

உடல் வலி இன்றி இருக்கும்

இன்சுலின் உற்பத்தி அதிகமாக காணப்படும்

 

மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள்

மக்னீசியம் குறைவாக உள்ளவர்கள் மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பதன் மூலம் மக்னீசியம் அளவு சீராக காணப்படும். கீழே அவ்வகை உணவுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

டார்க் சாக்லேட் வகைகள்

கீரை, பார்ஸிலி போன்ற பச்சை இல்லை காய்கறிகள்

அவகேடோ, ஆப்பிள், ப்ளம்ஸ், வாழைப்பழம் மற்றும் ஆப்ரிகாட் போன்ற பல வகைகள்.

பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகிய நட்ஸ் வகைகள்

பச்சைப்பயிறு, பருப்பு, தானியங்கள், பட்டாணி வகைகள்

பிரெளன் அரிசி, ஓட்ஸ், சிறுதானியம்

உருளைக்கிழங்கு, பூசணிக்காய், மீன்.

மக்னீசியம் அளவை சமச்சீர் செய்யும் ஸ்மூத்தி

மக்னீசியம் அளவு சீராக செய்ய நாம் வீட்டிலேயே நல்ல வகையில் ஸ்மூத்தி செய்ய முடியும்.

பார்ஸிலி இலைகள் மற்றும் ஆப்பிள் ஒரு வாழைப்பழம் தேவைப்பட்டால் இனிப்பு சிறிதளவுடன் தேன் சேர்த்து அருந்தலாம்.

மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ்

நாம் உண்ணும் உணவுகளிலும் மற்றும் காய்கறிகளிலும் மற்றும் விளைநிலங்களில் கூட ரசாயனங்கள் பயன்படுத்துவதால் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை இதனால் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறோம்.

மக்னீசியம் குளோரைடு

மக்னீசியம் கார்பனேட்

மக்னீசியம் சீட்ரேட்

மக்னீசியம் சல்பேட்

குறிப்பு: மக்னீசியம் குளோரைடு சப்ளிமெண்டுகளை ஜீரணக் கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.