கொலஸ்ட்ராலை விரைவில் கரைக்க கூடிய சித்தர்கள் பரிந்துரைக்கும் வீட்டிலேயே இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்..?

கொலஸ்ட்ராலை விரைவில் கரைக்க கூடிய சித்தர்கள் பரிந்துரைக்கும் வீட்டிலேயே இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்..?

தற்போதைய காலகட்டத்தில் வீட்டு உணவுகள் என்பது அனைவராலும் உண்ண முடிகிறது என்று கூற முடியாது. வேலைகளுக்கு செல்லும் நிறைய பேர் தனது உணவுகளை சரியாக உண்பதில்லை. சரியாக உண்டாலும் அது நல்ல உணவாக இருப்பதில்லை என்பதே உண்மை. இதனால் உண்டால் பருமன், தொப்பை, அதிகமான கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

உடல் பருமன் அதிகம் அடைவதால் உடலில் எண்ணற்ற நோய்கள் ஏற்படக்கூடும். கொலஸ்ட்ரால் உடலில் இதய கோளாறு, புற்றுநோய் போன்ற மிக மோசமான நிலைகள் ஏற்படக்கூடும். இவற்றை சரிசெய்ய பல வகையான மூலிகைகள் உள்ளன அதை நம் சித்தர்கள் பலர் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர். அவைகளை இந்த பதிவில் காண்போம்.

உடல் பருமன்

நம் உடல் பருமன் அடைய பலவிதமான வழிகள் இருக்கின்றன. விரைவு உணவகங்கள்  பர்கர், இனிப்பு போன்ற பொருள்களை உண்பதாலே உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகின்றோம்.

தேனும் பூண்டும்..

நம்மில் நிறைய பேர்க்கு நம் வீட்டில் உள்ள பொருட்களே ஆயுர்வேத பொருள்கள் என்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எளிமையக வீட்டில் கிடைக்கும் தேனும் பூண்டுமே உடல் பருமனுக்கு ஒரு சிறந்த மருத்துவப்பொருளாகும். பூண்டும் 20 பற்களை எடுத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். ஒரு கண்ணாடி ஜாடியில் தேனை ஊற்றி அதில் பூண்டை மூழ்கும் அளவுக்கு வைக்கவேண்டும். அதை தினமும் காலை உணவு உன்னது வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வரவேண்டும். இதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம்.

ஜின்செங்க்

ஜின்செங்க் இதற்கு குண சிங்கி என்றும் பெரியார் உண்டு. இது தனக்குள் எண்ணற்ற மருத்துவ தன்மைகளை வைத்திருக்க ஒரு மூலிகை ஆகும். ஆசியாவில் இவை பல ஆண்டுகளாக பயன்படுத்தும் ஒரு பொருள். இதை பற்றியும் பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவை கொலஸ்ட்ராலை முழுமையாக கரைக்கும் அற்புத திறன் கொண்டது. இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய மூலிகையாகும்.

மூலிகை டீ பற்றி அறிவீர்களா?

நமது உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய கொலஸ்ட்ராலை மிக விரைவாக கரைக்க கூடிய திறன் உள்ளது மூலிகை டீ. இதில் உள்ள முக்கிய மூல பொருள்கள் கொலஸ்ட்ராலை கரைத்து விடுகின்றன.

தேவையானவை:

கிரீன் டீ ௧ ஸ்பூன்

தேன் ௧ ஸ்பூன்

தண்ணீர் 1 கப்

செய்முறை: கிரீன் டீயை நீரில் போட்டு ஒரு ௫ நிமிடம் நல்ல மிதமான சூட்டில் எடுத்து கொண்டு அதனை வடிகட்டி அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்தவரலாம். ஒரு நாளுக்கு இரண்டு முறை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

துளசி

துளசி ஒரு கடவுளின் தாவரச்செடியாக கருத்தக்கூடியது. இதில் அதிக மருத்துவ குணம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவை கொலஸ்ட்ராலை கரைக்ககூடிய ஆற்றலும் கொண்டுள்ளது. உடலில் உள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு துளசிக்கு உண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை இருந்தாலே போதுமானது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைத்துவிடும். உடல் எடை போன்ற பல பிரச்சனைகளை எலுமிச்சை வைத்தே சரிசெய்துவிடலாம். இம்முறை மிக எளிதானதும் கொலஸ்ட்ராலை சீக்கிரம் கரைக்கவல்லதும் கூட இதனை முயற்சி செய்துபாருங்கள்.

தேவையானவை:

தேன் மற்றும் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

1 கப் நீர்

செய்முறை: நீரை சூடு செய்து அதில் எலுமிச்சைசாறு சேர்த்து மற்றும் தேன் கலக்கி மிதமான சூட்டில் குடித்துவரலாம். வெறும் வயிற்றில் தினமும் ஒரு குடித்துவரலாம்.

கொத்தமல்லி

கொத்தமல்லி என்ற கீரை வகையை சார்ந்த பொருள் கொலஸ்ட்ராலை மிக விரைவாக கரைக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும். இவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொண்டுவந்தால் எளிதாக உடல் எடையை குறைத்து விடமுடியும். உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் சேரவிடாமல் பாதுகாக்கிறது.

ஆளி விதிகள்

ஆளி விதைகள் பற்றி யாரும் அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அனால் இவை எளிதாக நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றன. இவை கொலஸ்ட்ராலை கரைக்கும் திறன் கொண்டது. இதயத்திற்கும் நல்லது இந்த ஆளி விதைகள்.

வெந்தயம்

வெந்தயம் இது நிச்சயம் அனைவர் வீட்டில் உள்ளதும் தெரிந்திருக்கக்கூடியதும் ஆகும். இவற்றை தினமும் ஒரு ஸ்பூன் உண்டு வந்தால் உடலின் கொலஸ்ட்ராலை காணாமல் போக்கிவிடும். செரிமான பிரச்சனைகளை சரிசெய்துவிடும். சளிபிடிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் குறைவாக உபயோகியுங்கள். இது உடலிற்கு குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது.

இந்த பதிவில் உள்ள விவரங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *