ஆரோக்கியத்திற்கான சமையல்

கேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..!!

கேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை…!!

கேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் இருக்கின்றன. இவை இரண்டும் உடலிற்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. அது எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – கைப்பிடியளவு
கேழ்வரகு – 1 /4 கிலோ
வெங்காயம் – 2
பச்சரிசி – கால் கப்
உளுந்தம்பருப்பு – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை செய்முறை:

முதலில் முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சரிசி, கேழ்வரகு, உளுந்தம்பருப்பு, இவை ஒவ்வொன்றையும் 3 மணி நேரம் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளவும்.

பிறகு இதன் மூன்றையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவேண்டும்.

அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து அதனுடன் உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும்.

புளித்த மாவில் முருங்கைக்கீரை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து சூடு ஆன பிறகு அரைத்து வைத்த மாவை கொண்டு தோசை ஊற்றி கொள்ளவும்.

சத்தான கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை தயார்.

இந்த பதிவில் உள்ள சமையல் குறிப்பு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

Related posts

உடலிற்கு வலிமையை கொடுக்கும் சாமைக்கஞ்சி..!

healthyshout.com

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..!

healthyshout.com

சத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..!!

healthyshout.com

Leave a Comment