ஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..!
ஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..!
சாப்பாடு சாப்பிட்டதும் அதை நமது ஜீரணம் செய்து அதன் சத்துக்களை பல்வேறு பாகங்களுக்கு அனுப்புகிறது. இது தான் நமது உடலும் சீரான நிலையாகும். ஆனால் சிலருக்கு ஜீரணம் என்பதே பிரச்சனையாக அமைந்து விடுகிறது. சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் போனால் அது நமது உடலுக்கு பெரிய பிரச்சனையாக கூட அமையும். நெஞ்சுக்கரிப்பு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சீரகம் நமது உடலின் ஜீரண சக்தியை தூண்டக்கூடிய ஆற்றல் கொண்டது. இதை உணவில் சேர்த்து எவ்வாறு ஜீரண சக்தியை அதிகரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜீரா சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 2
சீரகம் – 1 ஸ்பூன் அளவு
கிராம்பு – 2
அன்னாசிப்பூ – 1
இலவங்கப்பட்டை – 1
ப்ரிஞ்சி இலை – 1
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
ஜீரா சாதம் செய்முறை:
முதலில் கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும். ஊற்றி வைத்த நீரை எடுத்து தனியே வைத்து கொள்ளவேண்டும்.
குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் சிறிதளவு ஊற்றி, பின் கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் சீரகம் போட்டு நன்கு வதக்கவும்.
சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
கழுவி வைத்துள்ள அரிசி, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். பின்னர் அதில் 2 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.
சுவையான ஜீரணம் சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம் தயார்.