சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..!!!

சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..!!!

சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு விபரீதகரணி எனும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் சுவாச பிரச்னையை சரி செய்ய முடியும், விபரீத எனபது தலைகீழ் என்றும் காரணி என்பது செயல்பாடு என்றும் பொருள் ஆகும். இந்த நமது உடலில் சுவாச பிரச்சனை மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் செய்கிறது. நமது உடல் தலைகீழாக இருப்பதால் புவி ஈர்ப்பு சக்தியால் நமது உடலில் உள்ள உறுப்புகள் வலிமை பெறுகின்றன. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருவதால் பல நன்மைகளை நமது உடல் அடைகிறது.

செய்முறை: தரையில் ஒரு போர்வை விரித்து அதில் மல்லாந்து அமர்ந்து கொள்ள வேண்டும். மூச்சை உள்ளே இழுத்து. இழுத்த மூச்சை உள்ளேயே நிறுத்தி கொண்டு கால்களை வானம் நோக்கி நீட்ட வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புக்கு முட்டு கொடுத்து வைக்க வேண்டும்.

நமது இரு கைகளையும் இடுப்பு அடிப்பகுதியை தாங்கி இருக்குமாறு வைக்க வேண்டும். கால்கள் செங்குத்தாக நமது உடல் பாரம் முழுவதும் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிக்கு இருக்க வேண்டும். இப்போது மூச்சை வெளியே விட வேண்டும். இவ்வாறே மூச்சை உள்ளே இழுத்து வெளிய விட வேண்டும்.

இந்த பயிற்சியின் தொடக்கத்தில் இடுப்பை தூக்க கஷ்டமாக தான் இருக்கும் தொடக்கத்தில் இடுப்பு பகுதியில் தலையணையை வைத்து பயிற்சி செய்யலாம்.

பலன்கள்:

விபரீதகரணி இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் நமது மார்பகம் பலம் பெறுகின்றன. சுவாச நோய்களுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. நரம்பு தளர்ச்சி, ரத்த ஓட்ட பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. தைராய்டு பிரச்சனைகளை சரி செய்கிறது.

குறிப்பு:

இந்த ஆசனம் செய்வதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

பகலில் இந்த ஆசனம் செய்வீர்கள் என்றல் 200 எண்ணிக்கைக்கு மேல் செய்த வேண்டாம். ஏனெனில் இந்த ஆசனம் செய்வதால் தூக்கம் அதிகமாக வரும் இதனால் பகலில் குறைவாகவே செய்யவேண்டும்.

இரவு சாப்பிடும் முன்னரே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். ஆசனம் செய்து பின்பு ஒரு 20 நிமிடம் கழித்து சாப்பாடு சாப்பிடலாம். 1 டம்ளர் நீரை சூடாக குடித்து தூங்கினால் நல்ல அமைதியான துக்கம் ஏற்படும்.

இந்த ஆசனத்தை தலையணை கொண்டு செய்வது தான் பாதுகாப்பானது. அது தான் அதிக பலனும் தரும்.

முதுகில் ஏற்படும் வலி, கழுத்து வலி, தலைவலி, ஆஸ்துமா, நீரிழவு நோய் மற்றும் ரத்த ஓட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை இரவில் செய்து வருவதால் நல்ல தீர்வை இந்த ஆசனம் அளிக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *