சத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..!!

சத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..!!

கம்பு மற்றும் கேரட் இரண்டுமே உடலுக்கு சத்துள்ள உணவு பொருள் ஆகும். இதை சர்க்கரை உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது நல்லது ஆகும். இந்த கம்பு கேரட் ஊத்தாப்பம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் இதை உண்பதும் உடலுக்கு நல்லது. எவ்வாறு இந்த உணவை செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

கம்பு மாவு 1 கப்
இட்லி மாவு 1 /4 கப்
கேரட் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி சிறிய துண்டு
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

கம்பு கேரட் ஊத்தாப்பம் செய்முறை:

பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி இவை மூன்றையும் நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரம் எடுத்துக்கொண்டு அதில் கம்பு மாவு, இட்லி மாவு அதில் சிறிது அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதம் வருமாறு கரைத்துக்கொள்ளவேண்டும்.

கரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி. கருவேப்பிலை மற்றும் துருவிய கேரட் இவை அனைத்தையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வைத்து சூடு ஆனதும் மாவை ஊற்றி அதை சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுத்து கொள்ளவும்.

தோசை கல்லில் இருக்கும் போதே அதன் மேல் சிறிது கேரட் துருவலை போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

சத்தான சுவையான கம்பு கேரட் ஊத்தாப்பம் தயார்.

இந்த பதிவில் உள்ள சமையல் குறிப்பு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மாற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.