சுண்டைக்காய் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்! அதன் பயன்கள் பற்றி தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்..!
சுண்டைக்காய் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்! அதன் பயன்கள் பற்றி தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்..!
சுண்டைக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது என நம் முன்னோர்கள் கூறி கேட்டிருப்போம். ஆனால் அதன் கசப்பு குணத்தால் நாம் அதை உண்ணவே தயக்கம் காட்டுகிறோம் என்பதே உண்மை. ஆனால் சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணம் நம் உடலிற்கு தேவையானது ஆகும். இது ஒரு சிறந்த இயற்கை முறை வைத்தியம் ஆகும்.
சுண்டைக்காய் வற்றல்
நம்மில் பலர் சுண்டைக்காய் வற்றல் செய்தே உண்டு பழகிவிட்டோம் சிலர் அதை கூட உண்ணுவதில்லை. சுண்டைக்காயை நெய்யில் வறுத்து சாப்பாட்டுடன் உண்டு வந்தால் நீரழிவு நோயால் ஏற்படும் கை, கால், நடுக்கம் , மயக்கம், உடல்சோர்வு, வயிற்று பொருமல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக சுண்டைக்காய் செயல்படுகிறது.
சுண்டைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வருவது போன்றவை விரைவில் குணமடையும்.
சுண்டைக்காய் நம் ரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீர் பிரச்சனைகளை சரி செய்யும். உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம், இல்லாமல் இருக்கும். நெஞ்சுச்சளி, தொண்டைக்கட்டுவது போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோய் உள்ளவர்கள் இதனை அருந்தி வருவதால் இந்த நோய்களின் பாதிப்பு விரைவில் குறையும்.
பச்சை சுண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் கபக்கட்டு, ஈளை, காசம் , இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி,வெளியேறும். இந்த கையை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணையில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வருவதால் நெஞ்சில் ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா, காச நோய் சரியாகும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு சீரகம் வெந்தயம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சம அளவு சேர்த்து அதனை பொன்னிறமாக வறுத்து அதனுடன் உப்பு சேர்த்து சோற்றுடன் சேர்த்து உண்டு வந்தால் பசி மந்தம், சுவையின்மை, நலக்குடலில் உள்ள கிருமிகள், மற்றும் மூலம் குணம் அடையும்.
சுண்டை வற்றல் கறிவேப்பிலை, ஓமம், மாங்கொட்டை பருப்பு, நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவு எடுத்து அதனை தனி தனியாக வறுத்து எடுக்க வேண்டும். இந்த வறுத்த பொடியை 5 கிராம் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வரவேண்டும். இது வயிற்றில் உள்ள புழு மற்றும் சீதக்கட்டு நீக்கும். இதையே மார்பு சளி மற்றும் மூலம் நீரிழிவு இவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
சுண்டைக்காயை சிற்றாமணக்கு என்னை சேர்த்து உப்பு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடித்துப்போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம் செரியாமை, குணமாகும். சுண்டைக்காய் வேர்ப்பட்டையை போடி செய்து தேங்காய் குடுக்கையில் வைக்கவேண்டும். இதனை ஒரு சிட்டிகை எடுத்து உண்டு வர தலைவலி, நீரேற்றம், மனதை குடைச்சல், ஒற்றை தலைவலி குணமாகும்.