தூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..? சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

தூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..? சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

நாம் இரவில் உண்ணும் உணவு பொருட்கள் நமக்கு நல்லதா என்பதை உணராமல் உண்பவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் உண்ண கூடாத உணவுகளையெல்லாம் உண்டு வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கி கொள்கின்றனர். நம் வேலைகள் அனைத்தும் முடிந்து இரவில் பசியால் கண்ட கண்ட உணவுகளை உண்ணும் நிலை ஏற்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நம் உடல் தான், இதனால் இரவில் என்ன சாப்பிடவேண்டும் என்பதை விட என்ன சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

உணவு உண்பதில் இத்தனை பிரச்சனை உள்ளதா என்று நினைக்கிறீர்களா? ஆம் உணவை எவ்வாறு எப்பொழுது உண்ண வேண்டும் என்பதை நாம் சரியாய் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அறிந்து வைத்தால் நமது உடலுக்கு தான் நல்லது. இரவில் தூங்கும் சில உணவுகளை எல்லாம் உண்ண கூடாது. எந்த உணவுகள் என்பதை இந்த பதிவில் கூறுகிறேன்.

இரவு தூக்கம்?

இரவு தூக்கம் என்பது ஒரு நாள் முழுவதும் உழைத்தவர்களுக்கு சொர்க்கமாக இருக்கும். ஆனால் அதை நிறைய பேர் அனுபவிப்பதில்லை இதற்கு காரணம் உண்ணும் உணவாக கூட இருக்கலாம். தூக்கம் நெஞ்சு எரிச்சல், ஜீரணம் ஆகாமல் தவிப்பது போன்றவையால் தூக்கம் என்பது கலைந்துவிடும். இதனாலேயே நாம் உணவுகளை சரியான நேரம் பார்த்து உண்ண வேண்டும்.

காரசார சுவை கொண்ட உணவுகள்

காரம் அதிகமுள்ள உணவுகள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது தான். ஏனெனில் அது நமது வயிற்றில் குடல் பகுதியில் அதிக எரிச்சலையும் புண்களையும் ஏற்படுத்துகிறது. இந்த எரிச்சலை ஏற்படுத்தும் உணவை இரவு நேரங்களில் உண்பதால் குடலின் நிலைமையை யோசித்து பாருங்கள் மற்றும் இது நெஞ்சு எரிச்சல், அமைதியின்மையை ஏற்படுத்தி இரவு தூக்கத்தை கெடுத்து விடுகிறது.

சிக்கன்

தற்போது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் முக்கியமானது என்றால் அது சிக்கனாக தான் இருக்கும். ஆனால் அதை இரவு நேரங்களில் உண்ணும் பழக்கமும் நிறைய பேருக்கு இருக்கிறது. சிக்கன் செரிமானம் அடைய நேரம் எடுக்கும் இதனால் இரவு நேரங்களில் சிக்கனை உண்பதால் பல பாதிப்புகளை நமது உடலுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் சிக்கனை இரவு நேரங்களில் உண்பதை தவிர்த்தால் நமது உடலுக்கும் நல்லது மற்றும் நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

சீஸ்

சீஸ் கலந்த உணவுகளை இரவு நேரங்களில் உண்பதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். இதை நமது உடலுக்கு பலவிதமான பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் எடுத்து கொளவதால் ஒவ்வாமை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ரோக்கோலி

காய்கறி என்பது உடலுக்கு நன்மை தரக்கூடியது தான் ஆனால் இரவு நேரங்களில் சில காய்கறிகளை உண்பது உடலுக்கு தீங்கை விளைவிக்ககூடும். ப்ரோக்கோலியை இரவில் உண்பதால் வயிற்றில் அசௌகரியம் பிரச்சனை ஏற்படுத்தி செரிமான பிரச்சனைகளை உண்டாக்குகிறதாம்.

காபி

காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இரவு நேரங்களில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இரவு நேரம் வேலை செய்பவர்கள் தூக்கம் வராமல் இருக்க காபியை அதிகம் பருகுகின்றனர். இவ்வாறு காபியை இரவு நேரங்களில் குடிப்பது நமது உடலுக்கு பலபாதிப்புகளை ஏற்படுத்தும். மூலிகை கலந்த டீயை குடிப்பது நல்லது.

அவகேடோ

அவகேடா இந்த பழத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். இது மிகுந்த சத்துள்ள கொழுப்புகளை கொண்ட பழம் தான் ஆனால் இரவு நேரத்தில் உண்ண கூடாது. இரவு நேரத்தில் உண்பதால் செரிமான பிரச்சனை அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

சாக்லேட்

சாக்லேட் என்பது அனைவராலும் முக்கியமாக குழந்தைகளால் விரும்பி உண்ணக்கூடியது ஆகும். ஆனால் இதனை இரவு நேரங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள காபின் மற்றும் தியோபிரேமின் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது இதனால் நமது தூக்கம் கலைந்துவிடும். சாக்லேட் உண்பதால் இரவு நேரங்களில் இதய துடிப்பு அதிகரிக்கிறது.

மது அருந்துதல்

மது குடிப்பது என்பது நமது உடலுக்கு நாமே அழிவை தேடிக்கொள்வது ஆகும். முக்கியமாக இரவு நேரத்தில் குடித்து விட்டு தூங்கிவதால் நமது உடலில் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் போன்றவை பெரிதும் பாதிப்படைகிறது. இரவில் ஒயின் போன்ற மது பானங்களை தவிர்க்க வேண்டும்.

ஐஸ் கிரீம்

ஐஸ் கிரீம் இதை விரும்பாதவர்களே இல்லை இருப்பினும் இதை இரவு நேரத்தில் உண்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து விடும் மற்றும் வாயு தொல்லை, ஜீரண கோளாறு போன்றவைகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *