மன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை
மன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை
நம்மில் பலருக்கு உடலில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களை விட மனதில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களே அதிகமாக உள்ளனர். மனதில் ஏற்படும் நோய் என்பது மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பங்களே ஆகும். இந்த மன அழுத்தம் அதிகமானால் உடலில் நோய் பாதிப்புகளும் ஏற்படும். மன அமைதி இருந்தால் தான் மனிதர்கள் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியும். மன அழுத்தம் இருப்பதால் நெஞ்சுவலி, மற்றும் அதிகப்படியான சிந்தனைகள், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.
மன அழுத்தத்தை யோகா பயிற்சி செய்வதன் மூலமாக சரிசெய்ய இயலும். தினமும் யோகா செய்து வந்தால் மன அழுத்த பிரச்சனை இன்றி சந்தோசமான வாழ்கை வாழ முடியும். சூன்ய முத்திரை இது மன அழுத்தம் மற்றும் மன குழப்பத்தை போக்குகிறது. இது உடலில் உள்ள பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும். இதனை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
சூன்ய முத்திரை செய்முறை:
நம் நடு விரலை கட்டை விரலின் கீழே(அடியில்) வைத்து அழுத்தி மீதமுள்ள மூன்று விரல்களையும் நிமிர்ந்து இருக்குமாறு செய்து வரவேண்டும்.
தரையில் அமர்ந்து இந்த முத்திரையை செய்து வரவேண்டும்.
இந்த முத்திரை செய்து வந்தால் காதில் அடைப்பு ஏற்படும். இதனால் காதில் கோளாறு இல்லாதவர்கள் இதனை செய்யவேண்டாம்.
இந்த முத்திரையை ஒரு கையில் செய்வதே நல்லது. இரண்டு கைகளை உபயோகிக்க வேண்டாம்.
சூன்ய முத்திரையின் பலன்கள்:
சூன்ய முத்திரை தொடர்ந்து செய்வதால் மன அழுத்தம், மன கவலை, நெஞ்சுவலி, சீரற்ற ரத்த ஓட்டம், மற்றும் அதிகமான சிந்தனைகள் போன்றவற்றை சரிசெய்யும்
காதில் கோளாறு உள்ளவர்கள், காதில் இரைச்சல் ஏற்படுவது, காதுக்குள் ஒலி கேட்பது போன்று இருப்பது போன்றவை இருந்தால்
இந்த முத்திரையை 15-30 நிமிடம் வரை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தலைசுற்றல் ஏற்படுபவர்கள் செய்து வந்தால் தலைசுற்றல் இல்லாமல் இருக்கலாம்.
வயதுமுதிர்தல் அல்லது இடையில் ஏற்பட்ட சில பாதிப்புகளால் காது கேளாமை, பிறந்தால் இருந்தே காது கேளாமை பிரச்சனை இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்வதன் மூலம் சில மாற்றங்களை காண முடியும்.
பேருந்து பயணம் மற்றும் இன்னும் பிற வேறு பயணங்களால் வரும் தலை சுற்றல், வாந்தி, குமட்டல் வராமல் தடுக்க முடியும். இதனை இரண்டு நாட்களுக்கு முன்பு செய்து வருவது நல்லது.
மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு, கட்டிய உதிரம் வெளியேறுதல் நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் போன்றவற்றிற்கு இந்த முத்திரை செய்து வருவதன் மூலமாக நல்ல பயன் கிடைக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.