உடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..!!

உடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..!!

யோகா என்பது ஒரு கலாச்சாரம் சேர்ந்த உடற்பயிற்சி ஆகும். யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் பெற்று நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும். யோகா செய்வதால் மருந்துகள் ஏதும் இன்றி உடல் வழிகளை இயற்கையாகவே குணப்படுத்த முடியும். தலைவலி, முட்டி, முழங்கால், பின் முதுகு போன்ற அணைத்து பாகத்தின் வழிகளும் யோகா மூலம் சரிசெய்ய முடியும். இந்த யோகா ஆசனங்களை காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போதே செய்ய வேண்டும். காலையில் உங்களால் செய்ய நேரமில்லை என்றல் மாலையில் உணவு எடுத்துக்கொள்ளும் முன் இந்த ஆசனங்களை செய்யலாம்.

தணுராசனா

தணுராசனா (Bow pose) இது உடலில் பல பிரச்சனைகளை சரிசெய்ய சிறந்த யோகா ஆசனம் ஆகும். இந்த ஆசனம் செய்யும் போது உங்கள் முழு உடலும் வளைந்து உடலில் ரத்த ஓட்டம் சீராக அனைத்து பாகத்திற்கும் செல்கிறது.

தணுராசனா செய்வதால் ஏற்படும் பயன்கள்:

மூட்டு வலியை சரி செய்கிறது.

பின் முதுகு வலியை குணப்படுத்துகிறது.

மன அழுத்தத்தை குறைகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

உடல் எடை குறைய உதவுகிறது.

தணுராசனா செய்முறை:

முதலில் வயிறு தரையில் இருக்கும்படி நேராக படுத்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு உங்கள் கால் பகுதியை பின்னே தூக்கி இருக்குமாறு வைக்கவும். நம் கைகள் கால்களை பிடித்துக்கொண்டு நன்றாக வளைந்து இருக்குமாறு 20 நேராக பார்த்தபடி இருக்கவேண்டும். திரும்பவும் முதல் இருந்த மாதிரியே வரவேண்டும். இவ்வாறே தொடர்ந்து மூன்று முறை தினமும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக வலிகள் இல்லாமல் இருக்கும்.

பச்சிமோத்தாசனா

இந்த ஆசனம் செய்வதால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்றாக வளையும். இது ஒரு சிறந்த வலிநிவாரணி ஆசனம் ஆகும். இது உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

பச்சிமோத்தாசனா பயன்கள்:

தலைவலி வராமல் பார்த்துக்கொள்கிறது.

ஜீரண கோளாறுகளை சரிசெய்கிறது.

தோள் மற்றும் கழுத்து பகுதி வலிகளை குணப்படுத்துகிறது.

அடிவயிற்று கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மன ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

கால்களை வலிமைப்படுத்துகிறது.

பச்சிமோத்தாசனா செய்முறை:

முதல் நேராக கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும். அதன் பின் கைகளை நேராக இருக்குமாறு மேலே தூக்கி கொண்டு கைகளை வைத்து அப்படியே நம் கால்களை தொட முயற்சிக்க வேண்டும். முதலில் செய்யும் போது கடினமாக தான் இருக்கும் தொடர்ந்து செய்து வந்தால் கால்களை எளிதாக தொட்டு விட முடியும். கால்களை பிடித்துக்கொண்டே 20 முதல் 30 நிமிடம் வரை இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பயன்களை பெறலாம்.

த்ரிகோனாசனா

த்ரிகோணசனா இது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் வலிமையை கொடுக்க கூடியது. இது கை மற்றும் கால்களில் உள்ள வலிகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

த்ரிகோனாசனா பயன்கள்:

முட்டி வலிகளை போக்குகிறது.

கை மற்றும் முழங்கைக்கு பலத்தை கொடுக்கிறது.

பின் முதுகு வலியை சரிசெய்கிறது.

முதுகில் உள்ள நரம்புகளை தூண்ட உதவுகிறது.

குடல் பகுதிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

கழுத்து சுழுக்குக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும்.

த்ரிகோனாசனா செய்முறை:

நேராக நின்று கால்களை ஒரு அடி தூரம் விரித்து இருக்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். கைகளை மேலே தூக்கி வலதுகையை கொண்டு இடது காலையும், இடது கையை கொண்டு வலது காலையும் மாற்றி மாற்றி குனிந்து தொட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 30 நிமிடம் வரை செய்யவேண்டும்.

இந்த ஆசனங்களை தொடர்ந்து செய்து வந்தால் உடல் வலிகள் கண்டிப்பாக நீங்கும். உடல் வலிமை பெறும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன்.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *