முகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்

முகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்:

நாம் அன்றாடம் வீடுகளில் உபயோகப்படுத்தும் காய்கறிகளில் தக்காளி மிக முக்கியமானதாகும். இது உணவு பொருளாகவும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதன் உள்ள சிறந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கும் நம் முகத்திற்கும் பல நன்மைகளையும் சத்துக்களையும் அளிக்கிறது. தக்காளியை முகத்திற்கு எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்துவது என்பதை இந்த பதிவில் காண்போம்.

முகத்தில் உள்ள தழும்புகளை நீக்குவதற்காக தக்காளியை தயிருடன் கலந்து முகத்தில் 15 முதல் 20 நிமிடம் வரை மசாஜ் செய்து வரவேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள தழும்பு நீக்கி முக பொலிவை அளிக்கிறது.

முகத்தில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் முகப்பருக்கலாக தான் இருக்கமுடியும். இந்த பருக்களை தக்காளியில் உள்ள சத்துக்கள் பருக்கள் உருவாவதை தடுத்து முகத்தை பருவில்லாமல் மாற்றுகிறது.

முகத்தின் பொலிவை அதிகரிப்பதில் தக்காளியின் பங்கு அதிகம் இருக்கிறது. தக்காளி துண்டை தேனில் நனைத்து அதை முகத்தில் 10 முதல் 20 நிமிடம் வரை மசாஜ் செய்வதால் முக பொலிவு அதிகரிக்கிறது.

முகப்பருக்கள் முகத்தில் ஏற்பட்டால் முகத்தின் தோல் சிவப்பு அடைந்து புண்களை போல் காட்சியளிக்கிறது. முகத்தின் சிவத்தலை தக்காளியை முகத்தில் தடவுவதால் அதனை குறையச்செய்கிறது.

இறந்த செல்களை நீக்கி அதனை புதுப்பிக்க தக்காளியை நன்கு மசித்து அதில் கிளிசரின் சேர்த்து கலந்து அதனை தினமும் தடவி வருவதால் இறந்த செல்களையெல்லாம் நீக்கி செல்களை பளபளப்பாக வைத்து கொள்கிறது.

முகப்பரு ஏற்படுவதால் முகத்தில் உள்ள செல்கள் தான் அதிகமாக பாதிப்படைகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு பொலிவை அளிக்கிறது.

முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கி முகத்தில் ஏற்படும் சரும துளைகளையும் சரிசெய்கிறது. இதனால் தூசிகள் அழுக்குகள் முகத்தில் அண்டாதவாறு பார்த்துக்கொள்கிறது.

தக்காளி சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தின் செல்களை புதுப்பிக்கிறது இதனால் முகம் பொலிவாக இருக்கிறது.

தக்காளியில் உள்ள சாறு முகத்திற்கு ப்ளீச்சிங் செய்வது போலவே நமது முகத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.