வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்

வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்…!

 

ஒருவரிடம் நாம் பேசும் பொது அவர்களுக்கு முதலில் தெரிவது நம் பற்கள் மட்டுமே அந்த பற்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மஞ்சளாக இருந்தால் நாம் அடுத்தவரிடம் பேசவே தயங்கி நிற்போம். பற்கள் மஞ்சள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றால் நாம் நம்பிக்கையின்றி கூச்சத்துடன் வாழ நேரிடுகிறது. பற்கள் நமது உணவுகளை அரைத்து உணவுகுழாய்க்கு அனுப்புகிறது. உண்ணும் உணவுகள் சுத்தமாக வயிற்றுக்கு செல்லவேண்டும் என்றாலும் நம் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் கூறியது போல் பல் போனால் சொல் போச்சு என்பது உண்மை தான். ஆம் பல் போனாலே நம்மால் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது என்பது கடினம் தான். பற்கள் இல்லையென்றால் பல்வேறு வகையான நோய்கள் நம்மை பாதிக்கக்கூடும். பற்கள் மட்டுமில்லை வாய் துர்நாற்றம் இன்றியும் பத்துக்கொள்ளுதல் வேண்டும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயில் துர்நற்றம் வீசும் மற்றும் சாப்பிட்ட உணவுகள் பற்களில் சிக்கியிருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசுகின்றன.

முன்னெல்லாம் பற்களை துலக்க சாம்பலையும் உப்பையும் பயன்படுத்தினர். அதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. ஆனால் தற்போது பேஸ்ட் போன்றவைகள் அந்த அளவு ஆரோக்கியத்தை கொடுப்பதில்லை. சாம்பலையும் உப்பையும் கொண்டு பல் விலக்க நாம் கூச்சப்படுகிறோம் ஆனால் அதுவே மிக சிறந்த வகையில் பற்களை பாதுகாக்கிறது. பற்களில் உள்ள மஞ்சள் கரைகளையும் வாயில் ஏற்படும் துர்நற்றங்களையும் எவ்வாறு சரி செய்வது என்பது இந்த பதிவில் பார்க்கலாம்.

வாயில் ஏற்படும் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் வீசுவதற்கு நாம் உண்ணும் உணவுகள் வாயில் பற்களின் நடுவே மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும் போதும் பல் துலக்கும் போதும் சுத்தம் ஆகாமல் பற்களிலேயே இருந்தால் அது அழுகி அதன் கெட்ட வாடையானது வாயில் வீசுகிறது. வயிற்றில் அல்சர் பாதிப்பு இருந்தாலும், தொண்டையில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இவ்வாறு வாய் துர்நாற்றம் வீசும். மேலும் ஈறு நோய், சொத்தை பல், வயிறு தொடர்பான பிரச்சனைகள் துர்நற்றம் அடிக்க காரணமாக இருக்கலாம். வாயில் எதனால் துரமாற்றம் அடிக்கிறது என்பதை கண்டறிந்து அதறகான சிகிச்சைகளை மேற்கொண்டால் வாய் துர்நாற்றம் இன்றி இருக்கலாம்.

பற்களின் சுத்தம்

பற்களை சுத்தமாக வைக்க ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரண்டு முறை பற்களை துலக்கவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட் நம் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறதா என தெரிந்து உபயோகப்படுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் டூத் பிரஷ்கள் நம் பற்களின் சந்துக்கு நடுவிலும் சுத்தம் செய்வது போல வாங்கி கொள்ளவேண்டும். பற்களை துலக்கிய பின்பு ஈறுகளை மசாஜ் செய்வது பற்களை பலப்படுத்தும். நாம் உபயோகப்படுத்தும் பிரஷ்களை 60 முதல் 90 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளவேண்டும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறை

சிலருக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பற்களை துலக்கினால் மஞ்சள் கறை என்பது போகாது. அவர்களுக்கு பற்களில் மஞ்சள் கறை படியும். பற்கள் மஜால் நிறமாக இருப்பதற்கு அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பதாலும், புகைபிடிப்பது, வயது போன்றவற்றாலும் ஏற்படும். பற்களை சில இயற்கை முறை வழிகளை கொண்டு சுத்தம் செய்ய முடியும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு இரண்டையும் கலந்து தேய்த்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். எலுமிச்சை பழ தோலைக் கொண்டு துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழ தோல்

ஆரஞ்சில் உள்ள சி சத்து பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குகிறது. இரவு தூங்கும் முன்பு ஆரஞ்சு பழ தோலை கொண்டு பற்களை துலக்கி பற்களை கழுவாமல் தூங்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். மேலும் நாம் உண்ணும் கரும்பு மற்றும் அன்னாசிப்பழம் போன்றவை பற்களை சுத்தம் செய்யும் தண்மை கொண்டது. அதிக அளவு நார்ச்சத்து உள்ள காய்கறிகள் போன்றவை உண்பதாலும் பற்களின் ஆரோக்கியமானது அதிகரிக்கிறது.

சாம்பல் பேஸ்ட்

நம் முன்னோர்கள் சாம்பலை தான் உபோயோகப்படுத்திவந்தார்கள். நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட் அதனுடன் சாம்பலையும் கலந்து காலை இரவு என இருமுறை தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் அடையும். பல் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறையாது சென்று பற்களை பற்றி ஆலோசனை பெறுவது நல்லது .

பளிச்சென்று பற்கள்

பற்களை பளிச்சென்று வைக்க தான் பலரும் விரும்புகின்றனர். அதற்கு சமையல் சோடாவை கொண்டு பற்களை தேய்த்தால் பற்கள் பளிச்சென்று ஆகும். மாதம் ஒரு முறையாவது சமையல் சோடாவை கொண்டு பல் துலக்க வேண்டும்.

ஆப்பிளை கொண்டு பற்களை வெண்மையாக முடியும். ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே பற்களை சுத்தம் செய்கிறது. இந்த வழியில் பற்களின் இடையில் சிக்கும் துணுக்களை நீக்குகிறது. ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது நமது வாயை எண்ணெய் கொண்டு சுத்தம் செய்யும் முறை ஆகும். இந்த முறையில் செய்வதால் வாயில் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த்தொற்று, ஈறுகளை ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்வது நல்லது. நல்லெண்ணையை ஊற்றி 20 நிமிடம் வரை கொப்பளிக்க வேண்டும். பிறகு சுத்தமான நீரை கொண்டு வாயை கொப்பளித்து பிரஷ் செய்து கொண்டால் வாயில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று பற்கள் இருக்கும்

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *