முடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..!

முடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..!

தற்போது அனைவரும் விரும்புவது வயதானாலும் அடர்த்தியான மற்றும் கருமையான முடி வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். முடி ஒருவரின் அழகிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. நம்முடைய தலை முடி 6 மாதத்திற்கு 0.5 இன்ச் வளர்கிறது. ஆனால் அது சிலருக்கு வயது மற்றும் பரம்பரியம் மற்றும் உணவுமுறைகளால் மாறுபடுகிறது.

நம்மால் வயது மற்றும் பாரம்பரிய முறைகளை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் உணவுமுறையால் ஏற்படும் முடி பிரச்சனைகளை சில உணவுகளால் கட்டுப்படுத்த முடியும்.

இங்கு முடி வளர்ச்சியை தூண்டும் சில சிறந்த உணவுகளை குறிப்பிட்டிருக்கிறேன். முக்கியமாக அதிகமான முடிகொட்டுதல் உள்ளவர்களுக்கு..?

முட்டை

முட்டையில் புரதம் மற்றும் பயோடின் அதிகளவில் இருக்கிறது. இந்த இரண்டு சத்துக்களும் நம் முடியின் வளர்ச்சி அதிகப்படுத்தி முடி உதிர்வை குறைக்கிறது.முட்டை உண்பதால் அது நம் முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. முட்டையை தலைக்கு போடுவதாலும் முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. முட்டையில் அதிக அளவு துத்தநாகம் இருப்பதாலும் அது முடிக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.

பருப்பு மற்றும் விதை வகைகள்

பாதாம், வால்நட்,மற்றும் ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இது நம் முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தி நம் முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது. இதை கொழுப்பு அமிலங்களை நமது உடலால் நேரடியாக உற்பத்தி செய்ய இயலாது. இது வெளிப்புறத்திலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய சத்தாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மற்றுமொரு சிறந்த உணவு மீன் ஆகும்.

கேரட்

கேரட் ஒரு சிறந்த முடியின் வளர்ச்சியை நமக்கு தரக்கூடிய உணவுப்பொருள் ஆகும். இது நமது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த நல்ல ஆரோக்கியமான முடியை நமக்கு கொடுக்கிறது. கேரட்டில் வைட்டமின் எ அதிகளவு இருக்கிறது இது தலையின் வேர்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இதில் வைட்டமின் எ மட்டுமில்லாது வைட்டமின் பி, சி, ஈ, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் நமது தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதை பச்சையாகவும், வேக வைத்து அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.

அவோகேடோ

அவோகேடோ இது முடிக்கு ஒரு நல்ல உணவு பொருள் ஆகும். இதில் எண்ணெய் சத்து அதிகமுள்ள புரதம், அமினோ அமிலம், மற்றும் வைட்டமின் அதிக அளவில் இருக்கிறது. இது நம் தலையில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி தலையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அவகாடோவில் வைட்டமின் ஈ இருப்பதால் தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதை சாலட் மற்றும் ஜூஸ் போன்றும் குடிக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. வைட்டமின் சி நம் உடலில் கொலாஜினை அதிகரித்து முடிக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. கொலாஜென் இது உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது மற்றும் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது.

ஸ்பினாச்

ஸ்பினாச் இதில் அதிகமான சத்துக்கள் அதாவது இதில் அயன், வைட்டமின் எ,சி போன்றவை அதிகளவில் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது. வைட்டமின் எ இது முடியின் வேர்கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்து முடியை வலுவடைய செய்கிறது. இதில் அயன் சத்து இருப்பதால் அது முடி பிளவுபடுதலை சரிசெய்து நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது.

நாம் உண்ணும் உணவு நமது முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இந்த 6 உணவுகளை உங்கள் உணவில் அன்றாடம் சேர்த்து பாருங்கள் முடி உதிர்வு கட்டாயம் குறைந்து வளர்ச்சி ஏற்படும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *