சிறுநீரக கற்கள் உள்ளதா? எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு நீக்க முடியும்?

சிறுநீரக கற்கள் உள்ளதா? எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு நீக்க முடியும்?

சிறுநீரக கற்கள் நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்த கூடியது. சிறுநீரக கற்கள் நம் சிறுநீரகத்தில் சிறிய சிறிய துண்டு கற்களாக சேரக்கூடியது. அதை முன் இருந்தே கவனிக்காமல் இருந்தால் அது நமக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். இது ஒரு தானியம் அளவிலும் அல்லது பளிங்கு போன்ற அளவிலும் இருக்கும். இந்த கற்கள் சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த சிறுநீரக கற்களை எலுமிச்சை மற்றும் பர்சிலி சிரப் கொண்டு நீக்க முடியும். எவ்வாறு என்பதை இந்த பதிவில் காண்போம்.

சிறுநீரக கற்களால் வரும் ஆபத்தான காரணிகள்:

நீர்போக்கு

உடல்பருமன்

நோய்த்தொற்றுகள்

உப்பு நுகர்வு அதிகம் இருக்கும்

அறிகுறிகள்

சிறுநீர் செல்லும் போது சிறுநீருடன் ரத்தம் வருவது

அடிக்கடி குமட்டல் ஏற்படுவது

குளிர் அடிப்பது போன்ற உணர்வு இருப்பது

சிறுநீர் அடிக்கடி வருதல்

காய்ச்சல்

சிறுநீரில் அதிகளவு வாசம் அடிப்பது

எலுமிச்சை மற்றும் பர்சிலி சிரப்

எலுமிச்சை சாற்றில் அதிகளவு சிட்ரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் அமிலமும் இருக்கிறது. இந்த இரண்டு அமிலங்களும் சிறுநீரக கற்களை கரைக்க பெரிதும் உதவுகின்றன. பர்சிலி சிரப் சிறுநீரகத்தில் நச்சுக்கள் சேராமலும் நச்சுக்கள் இருந்தாலும் இது சிறுநீரிலேயே அகற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை 1

பர்சிலி ஒரு கையளவு

ஆலிவ் எண்ணெய்

தேன் 1 கப்

மாபிள் சிரப்

கற்று போகாத அளவு ஒரு ஜாடி

செய்முறை:

எலுமிச்சை மற்றும் பர்சிலி சேர்த்து ஜூஸ் செய்து கொள்ளவும், அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் மாபிள் மற்றும் தேன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு கற்று போகாத ஜாடியில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துக்கொள்ளவும்.

இந்த கலவையை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதுமட்டுமில்லாமல் நீராதாரம் அதிகமாக எடுத்து கொள்ளுதல் வேண்டும்.

வேறு சில வழிமுறைகளால் சிறுநீரக கற்களை குணப்படுத்த முடியும்.

சிறுநீரக கற்களை நீக்க மற்றும் அது சேராமல் தடுக்க சிறந்த வழி நிறைய நீர் குடிக்க வேண்டும்.

வைட்டமின் எ நிறைந்துள்ள உணவு பொருள்களை அதிகளவு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இது சிறுநீரக குழாய்களை சுத்தம் செய்கிறது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. வைட்டமின் எ அதிகம் நிறைந்துள்ள உணவுகளான கேரட், இனிப்பு, உருளைக்கிழங்கு, பூசணி, ப்ரோக்கோலி போன்றவைகளை உண்ணலாம்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறும் சிறுநீரக கற்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த கலவையாகும். இது இரண்டையும் கலந்து குடித்து அதன் பின் நீரை குடிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் கற்களை குறைத்து கற்களால் ஏற்படும் வலியை குறைகின்றன.

இளநீர் மற்றும் பார்சிலி தினமும் குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது.

சிறுநீரக கற்களால் பாதிப்பு உள்ளவர்கள் மிளகாய் மற்றும் மாசாலா மற்றும் பால் போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

நீங்கள் உங்கள் உணவில் அதிகம் பலன்களை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். தர்பூசணி, ஆப்பிள், மாதுளை மற்றும் திராட்சை போன்ற பலன்களை அதிகம் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன்.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *