அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..?
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..?
அன்னாசிப்பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். இது பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய பழம் ஆகும். இதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. இதில் உள்ள பழச்சாறு அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால் இந்த பழத்தின் சத்துக்கள் பற்றி எவரும் அறிந்திருப்பதில்லை. இந்த பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்ற என்சைம் இது நம் செரினாமத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. இதில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை நமது உடலுக்கு தேவைப்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். இந்த பழத்தில் உள்ள சத்துக்களால் நம்மில் உள்ள ரத்த அழுத்தம், குறைந்த வளர்ச்சி மாற்றம், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, கருவுறுதல் பிரச்சனைகள், வீக்கங்கள். புற்றுநோய் அபாயம், மனசோர்வு, மன அழுத்தம் போன்றவைகளை இது சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.ஹைப்பர் டென்ஷனை குறைக்கிறது. இந்த பழம் உண்ணுவதால் இதய நோய்கள் தடுக்கப்பட்டு இதயம் நலன் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக மாரடைப்பு போன்ற அபாயங்களில் இருந்து விடுபடலாம்.
இந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. இதில் சேர்க்கப்படும் அஸ்கார்பிக் அமிலம் மூலம் மேலும் வைட்டமின் சி ஊட்டசத்துக்கள் அதிகமாக கிடைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலில் நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது. வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நமது உடலை பாதுகாக்கும் அரணாக இருக்கிறது.
வைட்டமின் பி எனும் சத்தானது இருப்பதால் இது உண்பதால் நம் மனநிலையை சீராக வைத்து நம் ஹார்மோன் வளர்ச்சியை சீராக வைக்கிறது. மன பதற்றம் இது உண்பதால் குறைகிறது. அன்னாசியில் இருக்கும் நார்ச்சத்தானது நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தையும் அதிகரிக்கிறது.
அன்னாசி பழச்சாற்றை குடிப்பதால் உடல் சோர்வு இன்றியும் மற்றும் உடல் வளர்ச்சி அடைகிறது. உடலில் நீர்ச்சத்து இல்லாதவர்களுக்கு அன்னாசி பழசாறு நீர்ச்சத்தை சமன்செய்கிறது. உடலில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, தசைகளின் சுருங்கும் தன்மை சீராக்கப்படுகிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு அதுபோல இந்த பழத்தை அதிகமாக குடிப்பதால் சில தீய விளைவுகளும் நம்மை பாதிக்கின்றன. கர்ப்பகால பிரச்சனைகள், நீரிழிவு, எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, ரத்த போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.