குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..!

குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..!

குழந்தைகள் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் பற்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் தான் அவர்களுக்கு முறையாக சொல்லிக்கொடுக்கவேண்டும். பற்களை சுத்தமாக வைக்காமல் இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். இதனால் நாம் அவர்களுக்கு முறையாக கற்றுக்கொடுக்க வேண்டும்.

பற்களை பராமரிப்பதை வழக்கமாக பின்பற்ற வேண்டும்

பற்களை சுத்தம் செய்வது குழந்தைகளுக்கு முக்கியமான ஒன்றாகும். பற்களை காலை இரவு என இரு நேரங்களிலும் கண்டிப்பாக விலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் பற்களில் உண்ட பின் உள்ள உணவுகளும் மற்றும் கிருமிகளும் இன்றி சுத்தமாக இருக்கும். பற்களை விலக்குதல் மட்டும் இன்றி பற்களுக்கான உபகரணங்கள் வாங்கி அதில் சுத்தம் செய்து வருவதால் பற்களில் உள்ள சந்துகளில் சிக்கியிருக்கும் உணவுகளும் வெளியே வந்து வாய் சுத்தம் செய்து விடும்.

குழந்தைகள் பற்களை சுத்தம் செய்வது ஏன் முக்கியம் என்றால் அவர்கள் சர்க்கரை அதிகம் நிறைந்துள்ள தின்பண்டங்கள், சாக்லேட் வகைகளை அதிகம் உண்ணுகிறார்கள் இது பற்களில் இருந்தால் அது கிருமிகளை உருவாக்கி வாய் துர்நாற்றம் அடிக்க வைத்துவிடும். குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்வதற்கான ஐந்து வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

பற்கள் எவ்வாறும் விலக்கவேண்டும் என்று தெளிவாக கற்றுத்தருதல்?

பற்களை விலக்குதல் முக்கியமான ஒன்று என குழந்தைகளுக்கு முதலில் புரிய வைக்கவேண்டும். பற்களை விளக்குவது எளிது தான் ஆனால் அதை சரியாக செய்தல் தான் பற்களில் உள்ள கரைகளும், கிருமிகளும் நீங்கும். பற்களில் உள்ள உணவு பொருள்கள் நீங்குமாறு நன்றாக விலக்க கற்று கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு நல்ல மென்மையான பிரஸ்களை கொடுத்து பற்களை விலக்க வைக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு பிடிக்கும் பொருட்கள்

பற்களை விலக்குவது அதிலும் தினமும் விலக்குவது என்பது அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாக தான் இருக்கும். அவர்களுக்கு பிடித்தமான நிறங்கள் மற்றும் பொம்மைகள் இருக்கும் பிரஷ் அவர்களை கவரும் வண்ணம் உள்ள பற்பசைகள் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு பற்களை விலக்க விருப்பம் ஏற்படும்.

பிரஸ்களை மாற்றுதல்:

பிரஸ்களில் அதிகளவு பாக்டீரியா சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். கண்டிப்பாக நாம் உபயோகிக்கும் பிரஸ்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றுதல் வேண்டும். குழந்தைகளை இந்த பாக்டீரியாக்கள் எளிதல் தாக்குகிறது என்பதால் பிரஸ்களை மாதத்திற்கு ஒருமுறை கூட மாற்றுதல் என்பது நல்லது.

பல் மருத்துவரிடம் செல்வதை வழக்கமாக கொள்ளுதல்

குழந்தைகளை பல்மருத்தவரிடம் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது கூட்டிக்கொண்டு சென்று பரிசோதனை செய்யவேண்டும். அவர்களின் பற்கள் வரிசை நன்றாக இருக்கிறது மற்றும் கறைகள் இன்றி இருக்கிறதா என அனைத்துவிதமான பரிசோதனைகளும் செய்யவேண்டும். குறிப்பாக மருத்துவரிடம் சென்று பற்களின் ஆரோக்கியம் பற்றி அறிதல் அவசியம்.

குழந்தைகளை நாம் தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களின் பற்களை பற்றிய விஷயமும் முக்கியமான ஒன்று தான் இதனால் அவர்களுக்கு பற்களை பற்றிய விழிப்புணர்வு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *