உடல் ஆரோக்கியம்

இரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..!

இரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..!

இரவு நேரங்களில் நாம் உண்ணும் தின்பண்ட உணவு பொருள்களை அதன் பயன் அறிந்து தான் உண்ண வேண்டும். ஏனெனில் நாம் உறங்கும் போது தான் நமது உடலில் உள்ள உறுப்புகள் நன்கு வேலைசெய்கின்றன. அதுமட்டும் இல்லாமல் உணவானது விரைவில் செரிமானம் ஆகாமல் இருந்தால் இரவு தூக்கம் கெட்டுவிடும். இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது அது சிப்ஸ், சாக்லெட், ஆயில் அதிகமுள்ள உணவுகள் போன்றவைகள். இந்த பதிவில் உண்ணக்கூடிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

பால் மற்றும் மஞ்சள்

மிகுந்த பசியுடன் இருக்கும் பொது ஒரு டம்ளர் பால் மற்றும் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். மஞ்சள் ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதன் இரவில் நல்ல உறக்கத்தை அளித்து நல்ல ஜீரண சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

பாப்கார்ன்

இது ஒரு நல்ல ஆரோக்கியமான சிறந்த உணவு பொருளாக நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனென்றால் இதில் உப்பு, சக்கரை மற்றும் கலோரிகள் மிக குறைவாக உள்ளன. இதில காற்று மற்றும் ஃபைபர் கொண்டுள்ளன.

சீஸ்

இரவு நேரத்தில் நீங்கள் புரோட்டீன் நிறைந்த சிற்றுண்டி உணவு பொருள்களை எடுத்து கொள்வது சிறந்தது தான். பதப்படுத்தாத பாலாடைக்கட்டி ஒரு சிறந்த சத்துள்ள உணவு பொருளாக நிச்சயம் இருக்கும். ஆனால் அதை சமைக்கவோ அல்லது மசாலா கலந்து உண்ணக்கூடாது. இரவு நேரத்திற்க்கு மசாலா கலந்த உணவுகள் சிறந்தது அல்ல.

பிஸ்தா

அனைவரும் அறிந்த நட்ஸ் வகையை சார்ந்த உணவு பொருள் பிஸ்தா. இது இரவு நேரத்தில் உண்ண கூடிய சிறந்த சிற்றுண்டி ஆகும். இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான முக்கிய சத்தாகும். பாதம் கூட இரவில் சிற்றுண்டி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் இதில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் பொது இது ஒரு சிறந்த இரவு உணவு பொருளாக இருக்கும். இதில் மெலடோனின் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது இரவில் உண்ண ஒரு சிறந்த வகையான உணவு பொருள் ஆகும்.

Related posts

பாதாம் அதிகம் உண்பதால் சிறுநீரக கோளாறு மற்றும் பல விளைவுகளை உடல் சந்திக்க நேரிடுமாம்?

healthyshout.com

குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..!

healthyshout.com

கொலஸ்ட்ராலை விரைவில் கரைக்க கூடிய சித்தர்கள் பரிந்துரைக்கும் வீட்டிலேயே இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்..?

healthyshout.com

Leave a Comment