உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தலாமா? அவ்வாறு அருந்துவதால் என்ன மாற்றம் உடலில் ஏற்படும்?
உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தலாமா? அவ்வாறு அருந்துவதால் என்ன மாற்றம் உடலில் ஏற்படும்?
நீரின்றி அமையாது உலகு.. இது திருக்குறள் எழுதிய வள்ளுவனின் வாக்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. நீர் என்பது இந்த உலகில் ஒரு முக்கிய ஆதாரமாக தான் இருக்கிறது. தண்ணீர் குடிப்பதிலும் நிறைய விஷயங்கள் இருப்பது என்பது எத்தனை பேர்க்கு தெரிந்திருக்கும். அதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கபோகிறோம்.
தண்ணீர் குடிப்பது நல்லது என்று கேள்வி பட்டிருப்போம். ஆனால் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. இது பலரின் சந்தேகங்களாவே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்?
நன்மையா? தீமையா
நாம் அறியாத பலவிஷயங்கள் இவ்வுலகில் இருக்கின்றன. அது தெரியாது நாம் பலவற்றை தொடர்ச்சியாக கடைப்பிடித்தும் வருகிறோம். இதனால் கூட உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நம் பழக்கவழக்கங்கள் நன்மையா அல்லது தீமையா என்று கூட தெரியாமல் அதை தொடர்ச்சியாக செய்கிறோம். அது போன்ற பழக்கம் தான் உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்துவதும்.
நம் வயிற்றில் என்ன நடக்கிறது
நாம் உண்ணும் உணவானது செரிப்பது என்பது உடனே நடக்கும் விஷயமல்ல. செரிமானம் செய்வதே நமது உடலின் பெரிய வேலையாக இருந்து வருகிறது. உண்ணும் போது நமது எச்சில் உடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று வயிற்றில் உள்ள அமிலங்களுடன் சேர்ந்து செரிமானத்தை தொடங்குகிறது.
செரிமானம் செய்யும் நேரம்?
நாம் உண்ணும் உணவை பொறுத்தே செரிமான நேரம் கணக்கிடப்படும். உண்ணும் உணவு வயிற்றுக்கு ஏற்றதாக இல்லயெனில் மிகவும் சிரமம் கொள்ளும் செரிமானம் செய்ய. செரிமான நேரம் முடிந்த பிறகு தான் அந்த உணவானது கூழ்ம நிலையில் சத்துக்களை அந்தந்த பகுதிகளுக்கு அளிக்கிறது. நாம் உண்ணும் போது அருந்தும் நீரானது அதிக நேரம் வயிற்றில் இருப்பதில்லை.
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது அனைவரிடமும் இருக்கும் பழக்கம் தான். அது சரியானதா தவறானதா? நிச்சயம் தவறில்லை. ஆனால் அளவாக அருந்த வேண்டும்.. விக்கல் மற்றும் காரம் போன்ற காரணங்களுக்காக தண்ணீர் அருந்துவது தவறாகாது. ஆனால் அளவான தண்ணீர் அருந்த வேண்டும். உணவு உண்டு 30 நிமிடம் கழித்து நிறைய தண்ணீர் கூட அருந்தலாம் அது தவறில்லை.
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் செரிமானத்தை பாதிக்குமா?
நாம் உண்ணும் உணவானது தேவையற்றதாயின் அதனால் செரிமான கோளாறு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவதால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்துவதால் இன்சுலின் அளவு மாறுபடும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமின்றி நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே தண்ணீர் அருந்தும் பழக்கம் உணவு உண்ணும் போது தவிர்ப்பது நல்லதே.
செரிமானம் அதிகரிக்குமா திரவ பொருள்?
நம்மில் பலருக்கு இருக்கும் தவறான புரிதல் உணவு உண்ட பிறகு திரவ பொருள் குடித்தால் செரிமானம் அடையும் என்பதே. அது முற்றிலும் தவறான புரிதலே ஆகும். அவ்வாறு எடுக்கும் திரவ பொருளானது நமது செரிமானத்தை அதிகரிக்காது.
சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவதால் அமிலத்தன்மை சற்றே மாறுபடும் என ஆய்வாளர்களின் கருத்து. நம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதே அந்த அமிலத்தின் வேலை ஆனால் அதன் தன்மை மாறுபடுவதால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு, ஜீரணம் ஆகாமல் போகிறது.
நம்மை தண்ணீர் அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை அளிப்பது உணவில் உள்ள காரமும் உப்பும் தான். எனவே அதன் அளவு உணவில் சரியானதாக இருக்க வேண்டும். அவற்றை சீரான அளவில் சேர்த்தி உணவை ஆரோக்கியமாக உண்ணுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்…