உடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து என தெரிந்துகொள்வோம்?

உடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து என தெரிந்துகொள்வோம்?

நம் வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு விஷயம் வலி. அந்த வலி நமக்கு பல வேதனைகளுக்கு உட்படுத்துகின்றன. உடல் வலிகள் ஏற்படுவது என்பது மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரன விஷமயாகவே இருக்கலாம் ஆனால் சில இடங்களில் ஏற்படும் வலியானது நம்மை பெரிய ஆபத்தில் தள்ளிவிடுகிறது. வலிகளை குறைப்பதற்கான மருந்துகள் நிறைய உள்ளன ஆனால் அந்த வலி எதனால் வருகிறது என நாம் வலி ஏற்படும் பொழுதே தெரிந்துகொள்ளவேண்டும்.

நம்மில் ஏற்படும் வலி எதனால் வந்தது உடலில் என்ன பிரச்சனை என நாம் அறிந்து கொண்டிருக்கவேண்டும். இதை அறிந்து கொள்வதன் மூலம் நாம் நம் உடலை சரியாக பாதுகாத்துக்கொள்ளமுடியும். எந்த இடங்களில் வலிகள் இருந்தால் உடலுக்கு பேராபத்து என இந்த பதிவில் நாம் காண்போம்.

அடிவயிற்றில் ஏற்படும் வலி?

வயிறு பகுதியில் நாம் மிக கவனம் கொண்டிருக்கவேண்டும். வயிற்றில் வலி உடல் சூட்டினாலும் ஏற்படலாம். ஆனால் நாம் அதை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். வயிற்று வலி கிட்னியில் கல், குடல் புற்றுநோய், குடல் சதை வளருவது போன்ற காரணங்களாலும் வயிற்று வலி ஏற்படக்கூடும். நாம் வயிற்று வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே நல்லது.

விதைப்பை வலி?

இது ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வலி ஆகும். ஆண்களின் விதைப்பைகளில் ஏற்படக்கூடிய வலி சாதரணமாக நினைத்து விடக்கூடாது. அங்கே வலி ஏற்பட்டால் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது சிவப்பாக இருந்தால் உடலின் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம் இதனால் அங்கே வலி ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.

சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா?

உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படுகிறதா? இவ்வாறு ஏற்பட்டால் அது பாலியல் சார்ந்த நோயிற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். இவ்வாறு இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது.

உங்கள் நடுமுதுகில் வலி ஏற்படுகிறதா?

முதுகு வலி ஏற்பட்டால் அதனை சாதரனமாக நினைக்கவேண்டாம். அவை வெறும் முதுகு வலியாக மட்டும் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் முதுகு வலி இருந்தால் கிட்னியில் தொற்று, ரத்தத்தில் விஷ தன்மை ஏற்பட்டிருப்பது மற்றும் சிறுநீரகம் பழுதடைவது போன்றவை இருக்கலாம் இது பின்னர் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும். மருத்துவர் ஆலோசனை பெற்று அதனை தெரிந்துகொள்வது நல்லது.

தலை வலி ஏற்படுகிறதா?

தலை அடிக்கடி வரக்கூடியது என அனைவரும் சாதரனமாக எடுத்திக்கொள்கின்றனர். ஆனால் தலைவலி இருந்தால் நரம்பு பாதிப்பு, ரத்தநாளங்களில் பாதிப்பு, மூளை பாதிப்பு, புற்றுநோய், ரத்த ஓட்டம் தடைபடுதல் போன்றவை தலைவலிக்கான முக்கியகாரணங்களாகும்.

மணிக்கட்டில் வலி உள்ளதா?

கையின் மணிக்கட்டின் பகுதியில் வலி ஏற்படுமாயின் அதற்கு carpel tunnel syndrome என்றழைக்கப்படும் தசை சார்ந்த பிரச்சனையாகும். கைகளில் மணிக்கட்டு பகுதி வலி நீண்ட நாட்களாக இருந்தால் மருத்துவரிடம் சென்று பார்ப்பது சிறந்த தீர்வு ஆகும்.

மார்பக பகுதியில் வலியா?

மார்பக பகுதியில் வலி இருந்தால் நாம் அனைவரும் நினைப்பது இதய பிரச்சனையாக இருக்கும் என்பது தான். ஆனால் மார்பக புற்றுநோய் கூட ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எதுவாக இருந்தாலும் சரி மார்பக வலி இருந்தால் நாம் மருத்துவரை சென்று பரிசோதனை சரிசெய்வது நல்லது ஆகும்.

கீழ் முதுகில் வலி ஏற்படுகிறதா?

கீழ் முதுகில் ஏற்படக்கூடிய வலியை சாதாரனமாக எண்ணக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதை மருத்துவரிடம் கூறி ஆலோசனை கேட்டுக்கொள்ளவேண்டும். கீழ் முதுகு வலி உடலில் சிறுநீரக பிரச்சனை, கை, கால் செயலிழப்பு போன்றவை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது.

பெண்களுக்கான அடிவயிறு வலி?

பெண்களை மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுவது சகஜம் தான் ஆனால் அதுவே ஒரு பெரிய வலியாகும். ஆனால் அது அல்லாமல் மற்ற நாட்களில் ஏற்படுவது கர்ப்பப்பை கட்டிகளாகவும், சிறுநீரக தொற்றுகளாக கூட இருக்கலாம். இவ்வாறு இருந்தால் மருத்துவ பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பாதங்களில் உண்டாகும் வலி?

பாதங்களில் வலி ஏற்படுவது அதுவும் முள்குத்துதல் போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் சர்க்கரை நோயின் அறிகுறியாகும். இந்த அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரிபார்ப்பது சிறந்தது ஆகும்.

நம் உடலை நாம் தான் சரியாக பார்த்து பராமரிக்கவேண்டும். இந்த இடங்களில் வலி உண்டானால் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இந்தப்பதிவு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *